Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வல்லினத்துக்கு வழி பிறந்தது: 28ந் தேதி ரிலீஸ்

22 பிப், 2014 - 11:34 IST
எழுத்தின் அளவு:

ஈரம் படத்திற்கு பிறகு அறிவழகன் இயக்கி உள்ள படம் வல்லினம். தேவயானி தம்பி நகுல் ஹீரோ, மிருதுளா ஹீரோயின். தமன் இசை. கிரிக்கெட் வீரர்களுக்கும், பாஸ்கட் பால் வீரர்களுக்கும் இடையேயான மோதலுடன். விளையாட்டுக்குள் இருக்கும் அரசியலை வெளிச்சம்போட்டு காட்டும் படம். நகுல் 6 மாதங்கள் பாஸ்கட் பால் பயிற்சி எடுத்து மிகவும் கஷ்டப்பட்டு நடிச்ச படம்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்தப் படத்துக்கு தடங்கலுக்கு மேல் தடங்கல். பெங்களூருக்கு படப்பிடிப்புக்கு சென்ற இடத்தில் தொழிலாளர் பிரச்னையால் படப்பிடிப்பு ரத்தானது. இதனால் ஒரு கோடி செலவில் செயற்கை விளையாட்டு மைதானம் அமைத்து கிளைமாக்ஸ் படமாக்கப்பட்டது. திட்டமிட்ட பட்ஜெட்டை விட இரண்டு மடங்கு பட்ஜெட் உயர்ந்தது, ஆஸ்கர் பிலிம்சின் படங்கள் தொடர்ந்து தோல்வி அடைந்ததால் அந்த நிறுவனத்துக்கு நிதி நெருக்கடி. இதனால் படப்பிடிப்புகள் மெதுவாகத்தான் நடந்தது. இதன் காரணமாக படத்தை 2 வருடங்களாக இழுத்தடித்து முடித்தார் அறிவழகன். இந்த படம் ஆரம்பித்த பிறகு நகுலும், மிருதுளாவும் வேறொரு படத்தில் நடித்து அந்த படங்களும் ரிலீசாகிவிட்டன.

ஒரு வழியாக எல்லா பிரச்னைகளும் தீர்ந்து வருகிற 28ந் தேதி படம் ரிலீசாகிறது. 500 தியேட்டர்களில் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள். ஈரம் படத்திற்கு பிறகு நீண்ட இடைவெளிக்கு பிறகு வெளியாவதால் அறிவழகன் மிகவும் எதிர்பார்க்கும் படம். காதலில் விழுந்தேன் படத்துக்கு பிறகு நகுல் நடித்த படங்கள் எதுவும் அவருக்கு பெயரை பெற்றுக் கொடுக்கவில்லை எனவே இந்தப் படத்தை அவர் மிகவும் எதிர்பார்க்கிறார். புதுமுகம் மிருதுளாவுக்கும் அவர் கேரியரை தீர்மானிக்கப்போகும் படம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in