டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
சென்னை மாநகரின் கலாச்சார அடையாளங்களில் ஒன்று கானா பாடல், இசை அமைப்பாளர் தேவா கானா பாடல்களை சினிமாவில் புகுத்தி பிரபலமாக்கினார், அதன் பிறகு கானா உலகநாதன், மரண கானா விஜி, கானா பாலா என பல கானா பாடகர்கள் சினிமாவுக்கு வந்தார்கள். இப்போது கானா பாடல்களில் முதல் இடத்தில் இருப்பது கானா பாலா, அவரது சமீபத்திய பாடல்கள் அனைத்தும் ஹிட்டாகி உள்ளன. சிறு சிறு வேடங்களில் நடித்தும் வருகிறார்.
முதன் முறையாக கானா பாடல்களையே கிண்டல் செய்து ஒரு கானா பாடலை பாடுகிறார் கானா பாலா. கண்ணா லட்டு தின்ன ஆசையா டீம் எடுத்து வரும் வாலிபராஜா படத்தில்தான் இந்த பாடலை பாடுகிறார். "கானா நல்ல கானா அதை கேட்டு நீ போகாதே வீணா..." என்று தொடங்குகிறதாம் அந்த பாடல்.
வாலிபராஜாவில் சந்தானம், சேது, நுஷ்ரத், நடிக்கிறார்கள். சாய் கோகுல்ராம் நாத் இயக்குகிறார். படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்து விட்டாலும் இப்போது இந்த புதிய கானா பாடலை உருவாக்கி அதை கானா பாலாவை பாடவைத்து படம்பிடிக்க இருக்கிறார்கள். இதற்கு ஐடியா கொடுத்தவர் சந்தானம்.