ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பத்திரிகையாளர் முத்துராமலிங்கன் இயக்கியுள்ள படம் சினேகாவின் காதலர்கள். தமிழன் டி.வி தயாரித்துள்ள இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது. விழாவில் தயாரிப்பாளர் சங்கத்தலைவர் கேயார், இயக்குனர் சீமான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் கேயார் பேசுகையில், தயாரிப்பாளர் சங்கத்தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்றது செல்லாது என்று கோர்ட்டில் ஏற்கனவே வழக்கு தொடரப்பட்டிருந்தது. ஆனால் அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, எங்களுக்கு எதிரான அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்வதாக கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
நாங்கள் பொறுப்பேற்றதில் இருந்தே ஏற்பட்டு வந்த இதுபோன்ற பிரச்னைகளால் எந்தவொரு திட்டத்தையும் சரிவர செயல்படுத்த முடியாமல் தடுமாறி வந்தோம. ஆனால், இனி தயாரிப்பாளர் சங்கம் முழுவீச்சில் செயல்படும். தயாரிப்பாளர்களின் நலனுக்கான அனைத்து திட்டங்களும் விரைவில் செயல்படுத்தப்படும். மேலும், சின்ன படமோ, பெரிய படமோ எதுவாக இருந்தாலும் அதிகபட்சம் 40 லட்சத்திற்கு மேல் விளம்பரம் செய்யக்கூடாது என்ற திட்டத்தை உடனடியாக அமுல்படுத்த உள்ளோம் என்றார்.