Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

உதவி இயக்குனரான ஜீவா!

19 பிப், 2014 - 17:59 IST
எழுத்தின் அளவு:

சினிமாவில் வெறும் நடிகராக மட்டுமே இல்லாமல், முன்னதாக நடிப்பு, டைரக்ஷன் என தொழில்நுட்பம் குறித்த பல விசயங்களை படித்த பின்னரே சிலர், நடிகர்களாக என்ட்ரி கொடுக்கிறார்கள். நடிப்பு தவிர இதர விசயங்களையும் தெரிந்து கொண்டால் அது நடிப்புக்கு பெரிய உதவியாக இருக்கிறது என்று நினைக்கிறார்கள். அதோடு, எதிர்காலத்தில் தேவைப்படுகிறபோதும் இயக்குனர் அவதாரமும் எடுக்கலாம் என்ற நோக்கம் இதற்குள் அடங்கியிருக்கிறது.

அந்த வகையில், பாய்ஸ் படத்தில் நடிப்பதற்கு முன்பு மணிரத்னத்திடத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியவர்தான் சித்தார்த். அதேப்போல் விஷால் நடிக்க வருவதற்கு முன்பு டைரக்டராக வேண்டும் என்றுதான் அர்ஜூன் இயக்கிய ஏழுமலை உள்பட பல படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிக்கொண்டிருந்தார். மேலும், கும்கி படத்தில அறிமுகமான விக்ரம் பிரபு வெளிநாட்டில் டைரக்ஷன் படித்தவர்.

இந்த நிலையில், இதுவரை டைரக்ஷன் துறைக்குள் வராமல் இருந்த ஜீவாவும் இப்போது யான் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியிருக்கிறார். இப்படத்தில் படப்பிடிப்பு மொராக்கோவில் நடைபெற்றபோது உதவி இயக்குனர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால், தானே பேடு, டயலாக் பேப்பரை கையில் எடுத்தவர், சிலருக்கு டயலாக்கூட சொல்லிக்கொடுத்தாராம். மற்ற உதவி இயக்குனர்களுக்கு இணையாக அத்தனை வேலைகளையும் அவர் செய்ததை யான் யூனிட்டே ஆச்சர்யமாக சொல்லிக்கொண்டிருக்கிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in