பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
சினிமா கதாநாயகர்கள், முதுமையானாலும் உடம்பிலும், தலையிலும் முதிர்ச்சி தென்படக்கூடாது என்பதில் கவனமாக இருப்பார்கள். குறிப்பாக, தலையில் ஒரு முடி வெள்ளையாக தெரிந்தாலும் கருப்பு சாயம் பூசிக்கொண்டு தங்களை இளமையாக வெளியில் காட்டிக்கொள்வார்கள். ஆனால், இப்படியிருந்த இமேஜை ரஜினிதான் முதலில் உடைத்தார். டை அடிக்காத வெள்ளைத்தலை, தாடியுடன் சினிமா நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
அவரைத் தொடர்ந்து மங்காத்தா, வீரம் படங்களில் பாதி கருப்பு, வெள்ளையுமாக இருக்கும் தனது நிஜ தலைமுடி கெட்டப்புடன் நடித்தார் அஜீத். ஆனால் அதுவே இப்போது ஒரு பேஷனாகி விட்டது. தமிழ்நாட்டில் இதை யாரும் பின்பற்றாதபோதும், மலையாள நடிகர்களான மோகன்லால், மம்மூட்டி, ப்ருதிவிராஜ் ஆகியோர் தற்போது தாங்கள் நடிக்கும் படங்களில் அஜீத்தின் சால்ட் அண்ட் பெப்பர் ஹேர் ஸ்டைலில் நடித்து வருகிறார்கள்.
அந்த வகையில், மோகன்லால் ஜோஷி இயக்கும் படத்திலும், மம்மூட்டி கேங் ஸ்டார் என்ற படத்திலும், ப்ருதிவிராஜ் செவன்த்டே என்ற படத்திலும் அஜீத்தின் சால்ட் அண்ட் பெப்பர் கெட்டப்பில் தற்போது நடித்துக்கொண்டிருக்கிறார்கள். இதில் மோகன்லால், மம்மூட்டிக்கு ஏற்கனவே நரைமுடிகள்தான் என்பதால் அப்படியே நடிக்கிறார்கள். ஆனால், ப்ருதிவிராஜ் இந்த படத்திற்காக தனது தலைமுடியை ஒயிட்டாக மாற்றிக்கொண்டு நடிக்கிறாராம்.