Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சம்பளத்தை தடாலடியாக உயர்த்தினார் ஓவியா!

18 பிப், 2014 - 10:49 IST
எழுத்தின் அளவு:

களவாணி படத்தில் அறிமுகமான மலையாள நடிகையான ஹெலன் என்ற ஓவியாவுக்கு அதன்பிறகு கலகலப்பு ஓரளவு கைகொடுத்தது. தொடர்ந்து மூடர் கூடம், மதயானைக்கூட்டம், புலிவால் என சமீபத்தில் அவர் நடித்த பல படங்கள் திரைக்கு வந்தன. ஆனபோதும், எந்த படமும் வெற்றி பெறவில்லை. அதனால், மார்க்கெட்டில் பரபரப்பு இல்லாமலேயே இருக்கிறார் ஓவியா.

ஆனபோதும், புலிவால் படத்தில் முத்தக்காட்சி, படுக்கையறை காட்சி என புகுந்து விளையாடியதால் ஓவியாவின் பக்கம் சில கமர்சியல் படாதிபதிகள் திரும்பியுள்ளனர். அதனால் அயிட்டம் நடிகை ரேஞ்சுக்கு ஓவியாவை தோலுரிக்கும் பொருட்டு கதைகளுடன் முற்றுகையிட்டு வருகின்றனர். ஆனால் அந்த கதைகளை கேட்டு கதைக்கு தேவையான அளவு கிளாமர் காட்ட நான் ரெடி. ஆனால், அப்படி நடிக்க வேண்டுமென்றால் எனக்கு 20 லட்சமாவது தரவேண்டும். அப்படி சம்பள விசயத்தில் நீங்கள் தாராளம் காட்டினால், கவர்ச்சி விசயத்தில் நானும் தாராளம் காட்டுவேன் என்கிறார்.

முதலில் ஓவியாவிற்கு இது அதிகம்தான் என்று சொன்ன படாதிபதிகள் அடுத்த கிரேடில் நடிகைகளை நாடியபோது, அவர்கள் 30, 40 என்று லட்சங்களை சொல்லியடித்ததால், எகிறி குதித்து மறுபடியும் ஓவியாவின் பாசறைக்குள் வந்துள்ளனர். அதனால், அதிகமாக கூலி கேட்டு விட்டோமோ என்று பீல் பண்ணிக்கொண்டிருந்த ஓவியா, அவர்கள் மீண்டும் தன்னிடமே தஞ்சமடைந்திருப்பதால் சில படங்களில் 20 லட்சம் என சம்பளத்தை வாங்கி விட்டு, அடுத்த வருடத்திற்கு புக்காகும் படங்களுக்கான சம்பளத்தை இன்னும் தடாலடியாக உயர்த்தவும் திட்டம் வைத்திருக்கிறாராம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in