ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சாய்ராம் என்ற புதுமுக இயக்குனர் சொன்னா போச்சு என்ற படத்தை டைரக்ட் செய்கிறார். இதில் கோபிகா, சுமி, ரிச்சா, லட்சுமி என்ற 4 ஹீரோயின்கள் அறிமுகமாகிறார்கள். அருண், விஜய், சுரேஷ், அழகு என்ற நான்கு ஹீரோக்களும் அறிமுகமாகிறார்கள். படத்தின் தயாரிப்பாளர் பிசிஎம் என்பவரே பாடல்களை எழுதி இசையமைத்திருப்பதோடு படத்தில் திருதங்கையாக நடித்திருக்கவும் செய்கிறார்.
"எந்தவொரு ரகசியமும் மறைத்து வைக்கப்படும்வரைதான் அது ரகசியம். அது வெளியே கசிந்து விட்டால் ஒன்றுமில்லாமல் போய்விடும். மூட நம்பிக்கையில் மூழ்கி கிடக்கும் ஒரு கிராமம் ஒரு ரகசியத்தை நம்பி வாழ்ந்து கொண்டிருக்கிறது. அந்த ரகசியத்தை உடைத்து கிராமத்துக்கு விழிப்புணர்வு ஊட்டும் இளைஞர்களின் கதை. எதையும் கலர்புல்லா சொன்னால்தானே மக்கள் ஏற்பார்கள். அதனால்தான் 4 ஹீரோ, 4 ஹீரோயின்" என்கிறார் இயக்குனர் சாய்ராம்.