ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு |
தமிழ், மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் மீரா ஜாஸ்மின். தேசிய விருது பெற்ற நடிகை. இங்க என்ன சொல்லுது என்ற தமிழ் படத்தில் சமீபத்தில் நடித்தார். விஞ்ஞானி என்ற படத்தில் நடித்தும் வருகிறார். மலையாளத்தில் 3 படங்களில் நடிக்கிறார்.
மீரா ஜாஸ்மினுக்கும், துபாயில் கம்ப்யூட்டர் பொறியாளராக பணியாற்றும் அனில் ஜான் டைட்டஸ் என்பவருக்கும் திருமணம் செய்ய பெற்றோர்கள் முடிவு செய்தனர். அதன்படி இவர்கள் திருமணம் நாளை (பிப்ரவரி 12) திருவனந்தபுரத்தில் உள்ள ஏ.எல்.எஸ் தேவலாயத்தில் நடக்கிறது. அதன் பின்னர் மாலையில் நட்சத்திர ஓட்டலில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது.
இதற்கிடையில் நேற்று முன்தினம் (பிப்ரவரி 9) மீரா ஜாஸ்மின்-அனில் இருவரும் சட்டப்படி பதிவு திருமணம் செய்து கொண்டனர் என்ற செய்தி வெளியாகி உள்ளது. மீரா ஜாஸ்மின் வீட்டுக்கு பதிவு திருமண அதிகாரிகள் வந்து திருமணத்தை பதிவு செய்தனர். அவர்கள் முன் மீரா ஜாஸ்மினும், அனிலும் மாலை மாற்றிக் கொண்டு, மோதிரம் அணிந்து கொண்டனர். சிறப்பு திருமண பதிவு சட்டத்தின்படி இந்த திருமணம் நடந்திருக்கிறது.