'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் |
'குறுநில மன்னன்', இது காதலே இல்லாத ஒரு திரைப்படம் எனும் அடைமொழியுடன் கருவாகி, உருவாகி இருக்கிறது. நிஷா கென்னடி தயாரிப்பில் ர.முருகையா கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்கி இருக்கும் இப்படத்தில் பாடல்கள் அனைத்தையும் நா.முத்துகுமார் எழுத, கிராமிய மணம் கமழ இசை அமைத்திருக்கிறார் ஜோஹன் என்னும் புதியவர். ஒளிப்பதிவு-இராசாமதி. இராசாமதி இவர் வேறுயாருமல்ல பாடலாசிரியர் கவிஞர் அறிவுமதியின் வாரிசு தான். தமிழ் சினிமாவில் இது இவருக்கு நான்காவது படம் என்றாலும், முதல் கிராமிய மணம் கமழும் படம் என்பதால் இவரது ஒளிப்பதிவில் வித்தியாசத்தை உணரலாம் என்கிறார்கள் கோலிவுட்டில்.'குறுநில மன்னன்' என்று பெயர் வைத்துக் கொண்டு காதலே இல்லை என்றால் எப்படி? மன்னர்கள் என்றாலே அந்தப்புறம், அந்தரங்கம் எல்லாம் நிறைய இருக்குமே? என இயக்குனரைக் கேட்டால்...அது தான் குறுநில மன்னன்; காதல் இல்லாமல் காமம் ஏது? என எதிர்கேள்வி வருகிறது. அட?!!