ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ரஜினி நடித்து நீண்ட நாட்களுக்கு பிறகு திரைக்கு வரப்போகும் படம் கோச்சடையான். இது அனிமேஷன் படமாக இருந்தாலும், தமிழக ரசிகர்களைப்பொறுத்தவரை புதுமையான விசயம் என்பதால், ரஜினியை எப்படித்தான் காட்டப்போகிறார்கள் என்பதையும்தானே பார்ப்போமே என்று ரசிக வட்டம் ஆவல் கொண்டு நிற்கிறது.
இந்தநிலையில், ஏப்ரல் 11ந்தேதி படம் வெளியாகிறது என்று அறிவித்தவர்கள், இதுவரை ரஜினி படங்களுக்கு இல்லாத வகையில் வித்தியாசமான விளம்பர யுக்திகளை கையாளப்போகிறார்களாம். அதாவது, 10 லட்சம் கோச்சடையான் கார்பன் மொபைல்களை தென்னிந்தியாவிலுள்ள 27 ஆயிரம் ஷோரூம்களில் இறக்குமதி செய்கிறார்களாம்.
மேலும், இந்த மொபைல்களை விளம்பரப்படுத்தும் பொருட்டு, தொலைக்காட்சிகள் 6000 வினாடிகள், எப்எம்மில் 60 ஆயிரம் வினாடிகள், மற்றும் பத்திரிகைகளில் முழுப்பக்க விளம்பரங்களை கொடுத்தும் பெரும் பரபரப்பு கூட்டுகிறார்களாம். இதனால் எங்கும் எதிலும் கோச்சடையான் என்கிற ரேஞ்சுக்கு வித்தியாசமான வினோதமான பப்ளிசிட்டிகளை ஆரம்பிக்கப்போகிறார்கள்.