டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
ஆரம்பம், ராஜாராணி படங்களுக்குப்பிறகு ஆர்யாவின் மார்க்கெட் சூடு பிடித்துள்ளது. அதனால், அதற்கு முன்பெல்லாம் கதையை கடமைக்காக கேட்டு வந்த ஆர்யா, இப்போது ரொம்ப கவனமாக கதை கேட்கிறார். சில படங்கள் கொடுத்த அதிர்ச்சி தோல்வியே அவரை இப்படி மாற்றி விட்டுள்ளது.
அவர் நடித்து வரும் லேட்டஸ்ட் படங்களில் புறம்போக்கு, மீகாமன் இரண்டும் குறிப்பிடத்தக்கவை. இதில் புறம்போக்கு சமூகப்பார்வை கொண்ட படம். மீகாமன் எந்த மாதிரி கதையென்று கேட்டால், ஒரு மனிதனின் விளையாட்டுதான் இந்த படம் என்கிறார்கள். ஒரு விசயத்தை கையிலெடுத்த ஒருவன் அதை முடிக்க என்னென்ன பாடுபடுகிறான் என்பதே இந்த கதை.
இதுவரை ஆர்யா ஏற்காத வித்தியாசமான கதை. அதோடு தனது வழக்கமான கெட்டப்பில் இருந்து மாறுபடும் ஆர்யா, சண்டை காட்சிகளில் இதுவரை இல்லாத அளவுக்கு ரிஸ்க் எடுக்கிறாராம். தொடர்ச்சியாக பல படங்களில் சந்தானத்துடன் ஜோடி போட்டு நடித்து, காமெடி ஹீரோ ரேஞ்சுக்கு இமேஜ் மாறி விட்டதால், அதிலிருந்து இந்த படம் தன்னை மாற்றி ஆக்ஷன் தளத்திற்கு கொண்டு செல்லும் என்பது ஆர்யாவின் பெரிய நம்பிக்கையாக உள்ளாதாம். அதனால்தான் சண்டை காட்சிகளில் கூடுதல் ரிஸ்க் எடுக்கிறாராம்.