Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

செக்ஸ் டார்ச்சர் : சீரீயல் டைரக்டருக்கு தடை!

05 பிப், 2010 - 00:00 IST
எழுத்தின் அளவு:

சின்னத்திரையில் பல சீரியல்களை எடுத்து வெற்றி பெற்றவர் டைரக்டர் சி.ஜே.பாஸ்கர். இவர் தனது தொடர்களில் நடிக்கும் நடிகைகளுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுப்பதாக சின்னத்திரை கூட்டமைப்பு நிர்வாகிகள் கூட்டமைப்பிற்கு நிறைய புகார்கள் வந்தன. சித்தி, அண்ணாமலை, மனைவி, பெண், அஞ்சலி, கோகுலத்தில் சீதை, சாவித்ரி போன்ற தொடர்களை இயக்கியிருக்கும் பாஸ்கர் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசிக்க சின்னத்திரை கூட்டமைப்பு நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் நடந்தது. கூட்டத்தில் சின்னத்திரை நடிகர்கள் சங்கம், டைரக்டர்கள் சங்கம், எழுத்தாளர்கள் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் போன்றவற்றின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்ட முடிவில் டைரக்டர் சி.ஜே.பாஸ்கர் இயக்கும் தொடர்களில் இனி யாரும் நடிக்கக் கூடாது என்றும், அவருக்கு ஒத்துழைப்பு கொடுக்கக் கூடாது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அவருக்கு தடை விதித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சி.ஜே.பாஸ்கர் மீதான நடவடிக்கை குறித்து சின்னத்திரை தயாரிப்பாளர் சங்க தலைவி நடிகை குஷ்பு கூறுகையில், சி.ஜே.பாஸ்கரால் நடிகைகளும், தயாரிப்பாளர்களும் ஏராளமாக பாதிக்கப்பட்டு உள்ளனர். பெண்களுக்கு எதிரான செக்ஸ் கொடுமையில் ஈடுபட்டு வந்த சி.ஜே.பாஸ்கர் மீது நிறைய நடிகைகள் நடவடிக்கை எடுக்க வற்புறுத்தினார்கள். அதன்படிதான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. நடிகைகளை சீண்டினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும், என்றார்.

டைரக்டர் சி.‌ஜே.பாஸ்கர் இயக்கத்தில் நடிகைகள் கவுசல்யா, சங்கவி, மல்லிகா, ப்ரீத்தி, தீபா வெங்கட், மஞ்சரி, யுவராணி, நளினி, லதா, மீரா வாசுதேவன், சீதா, வைஷ்ணவி (தற்கொலை செய்து கொண்டவர்), சந்தோஷி, தேவதர்ஷினி, திவ்யதர்ஷினி, தேவி, புவனேஸ்வரி, நீனா, சுஜிதா உள்பட ஏராளமான நடிகைகள் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ''நான் ஏன் பிறந்தேன், வரலாறு, வெனம், அருந்ததி'' : டிவியில் இன்றைய திரைப்படங்கள் ''நான் ஏன் பிறந்தேன், வரலாறு, வெனம், ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

தலைவன் - singapore,சிங்கப்பூர்
07 செப், 2011 - 13:06 Report Abuse
 தலைவன் தலைவி அட்ஜஸ்ட் பண்ணினால் பாஸ்கர் இயக்க ரெடி ....!!!!!!!!!!!!! சீரியல சொன்னேன்
Rate this:
கோழி சங்கம் - namakkal ,இந்தியா
03 டிச, 2010 - 09:11 Report Abuse
 கோழி சங்கம் இவனுக பொழப்பு உலகறிந்த விஷயம்.இதை தான் தமிழ் திரை ரசிகர்கள் கால காலமாக கூறி வருகிறோம்.இப்போ கொஞ்சம் அளவுக்கதிகமாக போய் நடிக நடிகைகளே புகார் கூறும் அளவு வளர்ந்துவிட்டது...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in