தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மலையாளத்தில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துக் கொண்டிருக்கும் த்ரிஷியத்தை ரீமேக் செய்ய ஆளாளுக்கு போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள். தமிழ் ரீமேக்கில் கமல் நடிக்கிறார். அதனை த்ரிஷியத்தின் டைரக்டர் ஜீது ஜோசப்பே டைரக்ட் செய்கிறார். தெலுங்கில் வெங்டேஷ் நடித்து தயாரிக்கிறார். இந்தியில் அமிதாப் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் த்ரிஷயம் கன்னடத்தில் ரீமேக் செய்யப்பட இருக்கிறது. மோகன்லால் நடித்த கேரக்டரில் ரவிசந்திரன் நடிக்கிறார். மீனா நடித்த கேரக்டரில் மீனாவே நடிக்கிறார். பி.வாசு படத்தை இயக்குகிறார். ஏற்கனவே மலையாள படமான மணிசித்ரதாழை கன்னடத்தில் ஆப்தரக்ஷகா என்ற பெயரில் ரீமேக் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2 தினங்களுக்கு முன்பு படத்தின் துவக்க விழா பெங்களூரில் நடந்தது.