ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சமையல் மந்திரம் என்ற பெயரில் நள்ளிரவு நிகழ்ச்சி ஒன்று கேப்டன் டி.வியில் ஒளிபரப்பாகி வருகிறது. பாலியல் தொடர்பான இந்த நிகழ்ச்சியில் அது தொடர்பாக நேயர்கள் போனிலும், கடிதம் மூலமாகவும் கேட்கும் கேள்விக்கு டாக்டர்கள் பதில் அளிக்கிறார்கள். தமிழ் சேனல்களிலேயே அடல்ட்ஸ் ஒன்லி புரோகிராம் இது மட்டும்தான். இதன் தொகுப்பாளினியாக இருப்பவர் கிரிஜாஸ்ரீ. ஆண்களின் பாலியல் தொடர்பான கேள்விளை துணிச்சலாக கையாள்வதுடன். விதவிதமான உடைகளிலும் வந்து கலக்குகிறார். கிரிஜாஸ்ரீக்கு பல இடங்களில் ரசிகர் மன்றம் தொடங்கியிருக்கிறார்களாம்.
இதுபற்றி கிரிஜாஸ்ரீ கூறியிருப்பதாவது: பொதிகை டி.வியில் தான் என்னோட கேரியரை ஆரம்பிச்சேன். அப்புறம் பல சேனல் மாறி இப்போது சமையல் மந்திரம் நிகழ்ச்சி பண்ணிட்டிருக்கேன். முன்பு நிறைய நிகழ்ச்சி பண்ணியிருந்தாலும் இந்த புநிகழ்ச்சிலதான் பாப்புலாயிருக்கேன். வெளிநாட்டுல எனக்கு ரசிகர் மன்றமே ஆரம்பிச்சிட்டாங்க. தமிழ்நாட்டுல ஆரம்பிக்க பர்மிஷன் கேட்டுக்கிட்டுருக்காங்க.
செக்ஸ் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துறதுக்காகத்தான் இந்த நிகழ்ச்சி நடத்த ஒத்துக்கிட்டேன். ஆனாலும் ஒரு பொண்ணா எனக்கு எதிர்காலம் குறித்து பயம் இருக்கு. தூங்கா நகரம் உள்பட சில படங்கள்ல நடிச்சேன். நல்ல கேரக்டர் கிடைச்சா சினிமாவுலேயும் நடிப்பேன் என்கிறார் கிரிஜாஸ்ரீ.