Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு »

கோவா திரைப்பட விழாவில் நடுவர் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட படங்கள் மற்றும் விருதுகள்!

04 பிப், 2014 - 16:11 IST
எழுத்தின் அளவு:

பிரபல இந்திய நடிகர் விக்டர் பானர்ஜி 44 வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த படங்களை தேர்ந்தெடுக்கும் ஐந்து பேர் நிபுணர்கள் கொண்ட நடுவர் குழுவில் இடம் பெற்றிருந்தார். வங்காளம், இந்தி, ஆங்கிலம் என்று பல மொழிப் படங்களில் முக்கிய பாத்திரங்களில் நடித்திருக்கும் விக்டர் பானர்ஜி, சத்யஜித் ரே, ஷியாம் பெனகல், மிருனால் சென், ஜெர்ரி லண்டன், டேவிட் லீன், ஜேம்ஸ் ஐவரி, ரோமன் பொலான்ஸ்கி போன்ற சர்வதேச புகழ்பெற்ற இயக்குநர்களின் படங்களில் நடித்து புகழ்பெற்றவர்.

பெல்கிரேட்டை சேர்ந்த பிரபல பிரென்ச் இயக்குநர் கோரன் பஸ்கால்ஜெவிக் நடுவர் குழுவின் தலைவர். 16 திரைப்படங்களையும், 30 டாகுமென்ட்ரிகளையும் இயக்கியுள்ள அவரது படங்கள் கேன்ஸ், பெர்லின், வெனிஸ், டொரொண்டோ போன்ற சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டு பெற்றவை. பிரான்ஸ் நாட்டை சேர்ந்த இயக்குநர் எழுத்தாளர் க்ளேர் டெனிஸ், இலங்கையை சேர்ந்த இயக்குநர் பிரசன்னா வித்தனகே, ஆப்கானிஸ்தானை சேர்ந்த இயக்குநர் அடிக் ரஹிமி ஆகியோர் நடுவர் குழுவின் மற்ற உறுப்பினர்களாக இருந்தனர்.

விற்பனையில் சாதனை படைத்த பூமியும் சாம்பலும் என்ற புத்தகத்தை ரஹிமி எழுதினார். பின்னர் அதையே படமாக்கி ரஹிமி, கேன்ஸ் திரைப்பட விழாவில் அந்த படத்திற்கு விசேஷ பரிசையும் பெற்றார்.

கோவா திரைப்பட விழாவில் 2013-ம் ஆண்டு உலக சினிமா பகுதியில் பங்குபெற்ற இந்த நடுவர் குழு தேர்ந்தெடுத்த படங்கள், பரிசுகள் பற்றிய தகவல்கள் இதோ...

தங்கமயில் விருது - ஆஸ்திரேலியா அருகில் உள்ள கிழக்கு டிமோர் நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் டெட்டூன் மொழிப்படம் - பீட்ரிஸ் வார் தங்க மயில் மற்றும் ரூ.40 லட்சம் ரொக்க பரிசு, இயக்குநர் லுகி ஆகிஸ்ட்டோவுக்கு வழங்கப்பட்டது.

நூற்றாண்டு விழா சிறப்பு பரிசு - இயக்குநர் கமலேஷ்வர் முகர்ஜி இயக்கிய வங்காள மொழிப்படமான மே கே தக தாராவுக்கு வெள்ளி மயில் மற்றும் ரூ.15 லட்சம் பரிசு வழங்கப்பட்டது.

சிறந்த நடிகர் - அலான் மோனி அபெளட்பெளல்(எப்ளேஸ் இன் ஹெவன் என்ற இஸ்ரேலிய படம்) வெள்ளி மயில் மற்றும் ரூ.10 லட்சம் பரிசு

சிறந்த நடிகை - மேக்டலினா போஸார்ஸ்கா (இன் ஹைடிங் பத்திற்காக போலாந்து நாட்டு நடிகை) வெள்ளி மயில் மற்றும் ரூ.10 லட்சம் பரிசு

சிறந்த இயக்குநர் - கெளசிக் கங்குலி (அபுர் என்ற வங்கமொழி பட இயக்குநர்) வெள்ளி மயில் மற்றும் ரூ.15 லட்சம் பரிசு

நடுவர் குழுவின் விஷேச விருது - தெள கில்ட்ஸ்ட் தி ஈவன்(துருக்கி நாட்டு படம்) வெள்ளி மயில் மற்றும் ரூ.15 லட்சம் பரிசு

- கோவாவிலிருந்து எஸ்.ரஜத் -


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in