இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
கர்நாடக மாநில அரசியலில் சினிமா நட்சத்திரங்கள் ஈடுபடுவது அதிகரித்துள்ளது. கடந்த ஜுன் மாதம் மாண்டியா தொகுதியில் நடைபெற்ற பாராளுமன்ற இடைத் தேர்தலில் நடிகை குத்து ரம்யாக காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இப்போது வருகிற பாராளுமன்ற தேர்தலில் அதே மாண்டியா தொகுதியில் அவர் போட்டியிடுவது உறுதியாகிவிட்டது.
ரம்யாவை எப்படியாவது தோற்கடித்து விட வேண்டும் என்று மற்ற கட்சிகளும் களத்தில் இறங்கி இருக்கின்றன. ரம்யாவை எதிர்த்து திரைப்பட நட்சத்திரங்களை நிறுத்த அவர்கள் தயாராகி வருகிறார்கள். மதசார்பற்ற ஜனதா தளத்தின் சார்பில் ரம்யாவை எதிர்த்து நடிகை ரக்ஷிதாவை நிறுத்த முன்னாள் முதல்வர் குமாரசாமி முடிவு செய்துள்ளார். பாரதிய ஜனதாக கட்சியில் இணைந்து பணியாற்றி வரும் நடிகை கல்கி ஸ்ருதியை நிறுத்த எடியூரப்பா முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் கட்சி மேலிடம் உபேந்திராவை நிறுத்தலாம் என்று கருதுகிறது. எப்படி இருந்தாலும் மாண்டியா தொகுதி கர்நாடக மாநிலத்தின் நட்சத்திர தொகுதியாக மாறப்போகிறது.