பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
வாலி, குஷி உள்பட பல கிளுகிளுப்பான காதல் படங்களை தந்தவர் எஸ்.ஜே.சூர்யா, இவர் இயக்கத்தில் அஜீத் நடித்த வாலியும், விஜய் நடித்த குஷி படங்களுமே அவர்களுக்கு அந்த சமயத்தில் பெரிய திருப்புமுனையாக அமைந்தன. ஆனால் இயக்குனர் பயணம் நன்றாக போய்க்கொண்டிருந்தபோது, திடீரென்று எஸ்.ஜே.சூர்யாவுக்கும் நடிப்பு ஆசை ஏற்பட்டதால், ஹீரோவாக அரிதாரம் பூசினார்.
அவர் நடித்த முதல் படமான நியூ வெற்றி பெற்றதால் தொடர்ந்து, அன்பே ஆரூயிரே, வியாபாரி, கள்வனின் காதலி, நியூட்டனின் மூன்றாம் விதி போன்ற படங்களில் நடித்தார். ஆனால், இந்த படங்கள் எதிர்பார்த்த வெற்றி பெறாததால் எஸ்.ஜே.சூர்யாவின் கதாநாயகன் மார்க்கெட் அவுட்டானது. அதன்பிறகு அவர் மீண்டும் இயக்குனராக களமிறங்கியபோது அவர் எதிர்பார்த்த முன்னணி ஹீரோக்கள் யாரும் அவர் இயக்கத்தில் நடிக்க முன்வரவில்லை. அதனால் இசை என்ற படம் மூலம் மறுபடியும் தானே ஹீரோவாக நடித்துக்கொண்டிருக்கிறார்.
இந்நிலையில், இந்த படம் இரண்டு இசையமைப்பாளர்களின் ஈகோ சம்பந்தப்பட்ட கதையில் உருவாகியிருப்பதால், எஸ்.ஜே.சூர்யா தனது வழக்கமான பாணியில் இருந்து மாறுபட்டு விட்டதாக செய்திகள் கசிந்துள்ளன. ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார் அவர். இப்படத்தின் கதை இசையமைப்பாளர்களை மையப்படுத்தியதாக இருந்தாலும், என் படங்களில் வழக்கமாக இடம்பெறும் காதல் மற்றும் கிளுகிளுப்பான காட்சிகளுக்கு எந்த பஞ்சமும் வைக்கவில்லை. இன்னும் கேட்டால், மற்ற படங்களை விட இந்த படத்தில் கூடுதல் கிளுகிளுப்பான காட்சிகளை வைத்திருக்கிறேன். அதற்கேற்ப புதுமுக நடிகை சாவித்ரியும் ஈடு கொடுத்து நடித்திருக்கிறார். அவரது அழகான கவர்ச்சியை அளவோடு வாரி வழங்கியிருக்கிறேன். அதனால் இசை இளவட்ட ரசிகர்களை பெரிரும் கவரும் படமாக இருக்கும் என்று தெரிவிததுள்ளார் எஸ்.ஜே.சூர்யா.