தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
'ஆடுகளம்' டாப்சி பரபரப்பான நடிகை ஆகாததால், பெரிய அளவில் எந்த நடிகர்களுடனும் இணைத்து, கிசுகிசுக்களில் சிக்கவில்லை. ஆனால், தற்போது, டென்மார்க்கை சேர்ந்த, பேட்மின்டன் வீரர், மத்தியாஸ் போய் என்பவரை, டாப்சி காதலித்து வருவதாக, காஷ்மீரில் துவங்கி,
கன்னியாகுமரி வரை, வதந்தி, ரவுண்டு கட்டி அடிக்கிறது. டாப்சியை சந்திக்க, அடிக்கடி அவர் மும்பை வருவதாகவும், இருவரும் படப்பிடிப்பு தளத்திலேயே, காதலிப்பதாகவும், கூறப்படுகிறது. இதுகுறித்து, டாப்சியைக் கேட்டால், 'மத்தியாசும், நானும், நல்ல நண்பர்கள். அந்த அடிப்படையிலே, அவர் என்னை சந்திக்க வருகிறார். எங்களின் நட்பை, காதல் என, களங்கப்
படுத்த வேண்டாம்' என, கலங்குகிறார். மேலும், 'காதல், கல்யாணம் இதெல்லாம், தனிப்பட்ட விஷயம். அதனால், வதந்திகளை பரப்பிவிட்டு, இமேஜை கெடுக்காதீர்கள்' என்றும் கேட்டுக் கொள்கிறார் டாப்சி.