வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் இப்போது அங்கு வளர்ந்து வரும் இளம் நடிகர். முதன் முதலாக வாயை மூடி பேசுவோம் என்ற படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுமாகிறார். காதலில் சொதப்புவது எப்படி படத்தை இயக்கிய பாலாஜி மோகன் டைரக்ட் செய்கிறார். இதில் சல்மானுக்கு ஜோடியாக நஸ்ரியா நடிக்கிறார். நஸ்ரியாவுக்கும் பகத் பாசிலுக்கும் திருமணம் என்ற செய்திக்கு முன்பு சல்மானும், நஸ்ரியாவும் நெருக்கமாக இருப்பதாக கூறப்பட்டது. திருமணம் முடிவாகிவிட்ட நிலையில், நஸ்ரியா என் தங்கச்சி மாதிரி என்று கூறியிருக்கிறார் துல்கர் சல்மான்.
அவர் கூறியிருப்பதாவது: வாயை மூடி பேசவும் ரொம்ப ஜாலியான படம். கதையை கேட்டதும் நடிக்க ஒப்புக் கொண்டேன். என்னுடன் நடிக்கும் நஸ்ரியா என் அப்பாவுக்கு மகளாக பல படத்தில் நடித்திருக்கிறார். நஸ்ரியா எனது இளைய சகோதரி போன்றவர். எதையுமே பாசிட்டிவாக யோசிப்பவர். அவர் செட்டுக்கு வந்தாலே ஜாலியாவிடும். தமிழில் இருந்து நிறைய கதைகள் வருகிறது. எதையும் ஒப்புக் கொள்ளவில்லை. வாயை மூடி பேசவும் ரிலீசான பிறகுதான் மற்ற படங்களில் நடிப்பது பற்றி யோசிப்பேன் என்கிறார் சல்மான்.