Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

என் கல்யாணத்தை மற்றவர்கள் தீர்மானிக்க வேண்டாம்: ப்ரியாமணி சிறப்பு பேட்டி!

03 பிப், 2014 - 16:34 IST
எழுத்தின் அளவு:

தேசிய விருது வாங்கிய தமிழில் ப்ரியாமணி நடிச்சு ரொம்ப நாளாச்சு. மலையாளம், கன்னடத்தில் ஒரு சில படங்களில் நடிக்கிறார். மார்க்கெட் மளமளவென சரிந்து விட்ட நிலையில் அம்மா திருமணத்துக்கு ஏற்பாடு செய்வதாக தகவல். இதுப்பற்றி அவர் அளித்த சிறப்பு பேட்டி:

* 2014ம் ஆண்டில் கல்யாணம் பண்ணிக்கப்போறீங்களாமே?

மீடியாக்களே எனக்கு மாப்பிள்ளை பார்த்து தேதியும் குறிச்சிக்கிட்டிருக்காங்க. அதென்னமோ தெரியல என் அம்மாவுக்கு இல்லாத கவலை மீடியாவுக்கு இருக்கு. மீடியாக்கள் என்ன வேணாலும் எழுதிக்கட்டும், நானும், அம்மாவும் முடிவு பண்றப்பதான் கல்யாணம்.

* தமிழில் ஏன் நடிக்வில்லை?

ஏன் பிரியாமணியை நடிக்க வைக்கலைன்னு என்னிக்காவது தமிழ் இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள்கிட்ட கேட்டிருக்கீங்களா? அவுங்ககிட்டபோயி கேளுங்க. நான் தமிழ்நாட்டுக்காரி. நல்லா தமிழ் பேசத் தெரிந்தவள். தமிழ் சினிமாவுல அறிமுகமாகியிருக்கேன். தமிழ் படத்துக்கு தேசிய விருது வாங்கியிருக்கேன். அப்படி இருக்கும்போது தமிழ்ல நடிக்க கசக்கவா செய்யும். சரியான வாய்ப்பை யாரும் தரல. நடிக்கல. தரட்டும் நடிக்கிறேன்.

* தெலுங்குலேயும் மார்க்கெட் குறைச்சிட்ட மாதிரி தெரியுதே?

கன்னடம், மலையாளத்துல நடிக்கிறதால தெலுங்குல நடிக்க முடியல. அதுக்காக மார்க்கெட் குறைச்சிடுச்சுன்னு எப்படி சொல்ல முடியும். இன்னும் ஒரு மாசத்துல தெலுங்கு பட அறிவிப்பு வரும்.

* தெலுங்கு நடிகர்களுடன் நிறைய காதல் கிசுகிசுக்கள் வந்ததே?

என்னோட கல்யாண நியூஸ் மாதிரிதான் இதுவும். இஷ்டத்துக்கு எழுதுறாங்க. ஒவ்வொன்றுக்கும் மறுப்பு சொல்லிக்கிட்டிருந்தா வேற வேலை பார்க்க முடியாது. காதல்ங்றது என்னோட ரொம்ப பர்சனலான விஷயம். காதல் வந்தாலும் யார்கிட்டேயும் சொல்ல மாட்டேன். கல்யாணத்தை ஊருக்கே சொல்லித்தான் பண்ணிக்குவேன்.

* கவர்ச்சி இமேஜ்தான் தமிழ்ல வாய்ப்பு குறைஞ்சதுக்கு காரணம்னு சொல்லலாமா?

இப்போ நடிக்கிறவங்க எல்லோருமே புடவை கட்டித்தான் நடிக்கிறாங்களா? அதுக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்லை. பருத்தி வீரனுக்கு பிறகு அதே கிராமத்து கேரக்டரா நிறைய வந்துச்சு. ஒரே மாதிரி நடிக்க விருப்பம் இல்லாததால நடிக்கல. அதை வச்சிக்கிட்டு ப்ரியாமணி கிளாமராத்தான் நடிக்கும்னு சொல்லி கிளப்பி விட்டுட்டாங்க. சாருலதாங்ற படத்துல டுவின்சா நடிச்சேன். அது தமிழ்லேயும் வந்துச்சு. நிறைய விருதும் கிடைச்சுது அதை ஏன் யாரும் பேச மாட்டேங்குறாங்க.

* திடீர்னு ஓரின சேர்க்கையாளருக்கு சப்போர்ட் பண்ணினீங்களே ஏன்?

நான் சொன்னதை தப்பா புரிஞ்சிக்கிட்டாங்க. ஒரு பேட்டியில ஓரின சேர்க்கையாளர் பற்றி கேட்டப்போ. அது அவுங்களோட தனிப்பட்ட விருப்பமுன்னு மட்டுந்தான் சொன்னேன். உடனே நான் ஓரின சேர்க்கையை ஆதரிக்கிற மாதிரி பெருசாக்கிட்டாங்க.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; காத்திருக்கும் சவால்கள்! 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in