வீர தீர சூரன் - 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62' | 'புஷ்பா 2' - ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா? | ரூ.5 கோடி தாண்டாத தமிழ்ப் படங்கள் : ரூ.50 கோடியைக் கடந்த மலையாளப் படங்கள் | வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி |
தமிழில் விஜயகாந்த் நடித்த எங்கள் அண்ணா படத்தில் அறிமுகமானவர் குஜராத் குதிரை நமீதா. அதற்கு முன்னதாக 2002-லேயே சொந்தம் என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமாகி விட்ட அவர் கடந்த 10 ஆண்டுகளில் 40-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து விட்டார். அதில், பில்லா, அழகிய தமிழ்மகன், வியாபாரி, நான் அவனில்லை, கோவை பிரதர்ஸ், நீ வேணுன்டா செல்லம், ஜெகன்மோகினி ஆகிய படங்கள் குறிப்பிடத்தக்கவை.
ஆனால், இப்படி பல படங்களில் நடித்து விட்டபோதும், இதுவரை டப்பிங் பேசி எந்த படத்திலும் ரிஸ்க் எடுக்காத நமீதாவுக்கு, இப்போது தனக்குத்தானே தமிழில் டப்பிங் பேசி நடிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டுள்ளதாம். அதனால், இனி நான் நடிக்கும் தமிழ்ப்படங்களில் டப்பிங் பேசப்போகிறேன் என்று சில மேடைகளில் முழங்கி வருகிறார் நமீதா.
அதைப்பார்த்து இதெல்லாம் நடக்கிற காரியமா? என்று யாராவது கிண்டல் செய்தால், நடத்திக்காட்டுவேன் என்று மார்தட்டுகிறார் நமீதா. அதோடு, தனது உதவியார்கள் மூலம் தனது வாயில் நுழையாத ழ, ள, ழு போன்ற தமிழ் எழுத்துக்களை இப்போது ஒன்னாங்கிளாஸ் பிள்ளைகள் போன்று உச்சரித்துக்கொண்டிருக்கவும் தொடங்கி விட்டார் நமீதா.