'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு |
மதுரை தொழில் அதிபர் சிவகுமாரின் மகள் சிவாணி. சாப்ட்வேர் என்ஜீனியராக சென்னையில் பணியாற்றி வருகிறார். படிக்கிற காலத்தில் கோல்ட் மெடலிஸ்ட். வேலையிலும் நம்பர் ஒன். லட்சத்தை தாண்டிய சம்பளம் இத்தனையும் இருந்தும் சிவாணிக்கு சினிமா மீது தாக்கம். ஒரு படம் டைரக்ட் செய்ய வேண்டும் என்று இரண்டு வருடங்கள் சினிமாத்துறையை சேர்ந்தவர்களை சந்தித்தும், சினிமா சம்பந்தமான புத்தகங்களை படித்தும் தெரிந்து கொண்டு களத்தில் இறங்கி விட்டார். சிவாணியின் அம்மா கலைவாணி சிறுகதை எழுத்தாளர். அவரின் கதை ஒன்றையே தேர்வு செய்து அதற்கு திரைக்கதை அமைத்து படமாகவும் டைரக்ட் செய்து முடித்து விட்டார். படத்தின் டைட்டில் சோன்பப்டி. வழக்குஎண் ஸ்ரீ ஹீரோ. விளம்பர படங்களில் நடித்து வந்த நிரஞ்சனா ஹீரோயின். தன்ராஜ் மாணிக்கம் மியூசிக். தனு பாலாஜி கேமராமேன்.
"நான் எதைச் செய்தாலும் துணிச்சலுடன் அதை செய்து முடிப்பேன். டெய்லரிங் படிக்காமேலேய அதை கண்ணால் பார்த்து கத்துக் கொண்டேன். எந்த ஒரு வேலையிலும் லீடர்ஷிப் எனக்கு பிடிக்கும். அதான் டைரக்டராகணும்னு முடிவு பண்ணினேன். அம்மாவோட கதையை படமாக்கி முடிச்சிட்டேன். திட்டமிட்டபடி 45 நாள்ல ஷூட் பண்ணி முடிச்சிட்டேன். முதல் படத்தோட டைட்டில் சுவீட்டா இருக்கட்டுமே என கருதி சோன்பப்டி என்று வைத்திருக்கிறேன். வாழ்க்கையை எப்போதுமே ரசிச்சு வாழணும். இன்பம், துன்பம் எது வந்தாலும் அதை ரொம்ப நாள் வச்சிருக்காம அப்பப்போ அனுபவிச்சிட்டு அடுத்த கட்டத்துக்கு போயிடணுங்றதுதான் கதை. காமெடி, காதல் த்ரிலிங் என மிக்ஸ் பண்ணி தரப்போறேன் என்கிறர் சிவாணி.