தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஹாலிவுட்டில் பிரபலமான படம் ஹேங்ஓவர். ஒரு ராத்திரி முழுவதும் தண்ணி அடித்து மட்டையாகி மறுநாள் காலை எல்லாமே மறந்து போய் ராத்திரி என்ன நடந்துச்சு என்று அல்லாடும் குடிமகன்களின் கதையாக அது இருந்தது. இப்போது அதே பாணியில் தமிழில் ஒரு படம் ரெடியாகிக் கொண்டிருக்கிறது. படத்தின் டைட்டில் குபீர். அதாவது சீயர்ஸ் என்பதை குபீர் என்று மொழிபெயர்த்திருக்காங்க.
"சாப்ட்வேர் கம்பெனி இளைஞர்கள் எல்லாம் ஈசியார் பார்ம் ஹவுசில் வீக் எண்ட் பார்ட்டி வச்சி நல்லா தண்ணி அடிக்கிறாங்க. பேசிக்கிட்டே இருக்கும்போது அவுங்களுக்குள்ள ஒரு பந்தையம் வந்துடுது. அதுல ஜெயிக்கிறதுக்கு போதையிலேய போராடுறாங்க. காலையில பார்த்தா எல்லாமே தலைகீழா இருக்கும். அது என்ன போட்டின்னு சொல்லிட்டா படத்தோட சஸ்பென்ஸ் போயிடும்" என்கிறார் டைரக்டர் திலீப்.
படத்தில் ஹீரோ, ஹீரோயின்னு யாருமே கிடையாது. ஏகப்பட்ட பேரு நடிச்சிருக்காங்க. குடிக்கிறவங்களுக்கு படத்துல நல்ல ஒரு மெசேஜ் இருக்கு என்றும் சொல்கிறார் திலீப்.