'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு |
காமெடி நடிகர்கள் தான் ஹீரோவாக நடிக்க வேண்டுமா? காமெடி நடிகையும் ஹீரோயின் ஆகியிருக்கிறார். பல சிறு பட்ஜெட் படங்களில் காமெடியாகவும் கவர்ச்சியாகவும் நடித்து வந்தவர் ஜோதிஷா. இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் தாதாக்களின் ஆசை நாயகியாக வந்து கடைசியில் மச்சினன் சூரியையும் மடக்கி போட்ட கேரக்டரில் நடித்து பாப்புலர் ஆனார்.
இப்போது ஜோதிஷா சமுதாயம் செய் என்ற படத்தில் ஹீரோயின் ஆகியிருக்கிறார். அவருக்கு ஜோடியாக ராவணன் என்ற நியூபேஸ் நடிக்கிறார். எஸ்.பி.என்பவர் டைரக்ட் செய்கிறார். "ஓடுற வரைக்கும்தான் வாழ்க்கை, சுத்துற வரைக்கும்தான் உலகம். நல்லது கெட்டது எதுவும் இல்லை. வாழ்க்கை ஒரு முறைதான் அதில் நமக்கு பிடித்தமானதை செய்து கொண்டே இருக்க வேண்டும். நமக்கு பிடித்ததை கையில் எடுத்துக் கொண்டே இருக்க வேண்டும் அதைத்தான் இந்தப் படத்துல சொல்றோம்" என்று படத்துக்கு இண்ட்ரோ கொடுக்கிறார் டைரக்டர் எஸ்.பி.