தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
அஞ்சலியுடன் ஏற்பட்ட பிரச்னை காரணமான தனது ஊர்சுற்றி புராரணம் படத்தை மூட்டை கட்டி வைத்து விட்டு நண்பர்களின் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார் களஞ்சியம். சுப.தமிழ்வாணன் என்பவர் தயாரித்து டைரக்ட் செய்யும் ஆனந்த மழை என்ற படத்தில் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். தமிழ் இயக்க தலைவர், மீனவர் சமுதாய தலைவர் என்ற இரண்டு வேடங்களில் நடிக்கிறார்.
பிழைப்பு தேடி சென்னை வரும் இரண்டு இளைஞர்கள் தமிழ் இயக்க தலைவர் அறையில் தங்கி அவரிடம் அறிவுரை பெற்று பிழைப்பை விட்டுவிட்டு மக்களுக்காக போராடுகிற கதையாம். அந்த இளைஞர்களாக ஜெய ஆனந்த், சுப.தமிழ்வாணன், நடிக்கிறார்கள். விகிதா, ஸ்ரீஜா ஹீரோயின்களாக நடிக்கிறார்கள். சென்னை, ராமேஸ்வரம் பகுதியில் ஷூட்டிங் நடத்தியிருக்கிறார்கள். ஸ்டீபன் ராயல் இசை மீட்டுகிறார். கணேஷ்ராஜா கேமரா மேன்.