தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
விஜயசேதுபதி பிரபலமில்லாத நடிகராக இருந்தபோது அவர் நடித்த பீட்சா படத்தில் நடித்தவர் ரம்யா நம்பீசன். அதற்கு முன்பெல்லாம் ரொமான்ஸ் காட்சிகளில் அதிகமான நடித்திராத ரம்யா, பீட்சாவில் விஜயசேதுபதியுடன் நெருக்கமாக நடித்திருந்தார். ஆனால், படம் வெற்றி பெற்றபோதும், அவர்களின் ரொமான்ஸ் பெரிய அளவில் பேசப்படவில்லை.
இதுபற்றி ரம்யா கூறுகையில், பீட்சா படம் த்ரில்லர் கதை என்பதால், ஆரம்பத்தில் எங்களுக்கிடையே நிகழ்ந்த அந்த நெருக்கமான காட்சிகளை, த்ரில்லிங்கான காட்சிகளை பார்த்த பிறகு மறந்து விட்டார்கள் ரசிகர்கள். அதனால், எனக்கும், விஜயசேதுபதிக்குமிடையே அப்படத்தில் ஒர்க்அவுட்டான கெமிஸ்ட்ரியை மிஞ்சும் வகையில் இன்னொரு படத்தில் அவருடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு ஏற்பட்டுள்ளது என்கிறார் ரம்யா.
சமீபத்தில் விஜயசேதுபதியை சந்தித்தபோது, இதுபற்றி சொன்னாராம் ரம்யா. அதற்கு, சந்தர்ப்பம் அமைந்தால் கண்டிப்பாக நடிப்போம் என்று சொன்ன அவர், சினிமாவில் எனக்கு முன்பே கதாநாயகி ஆனவர் நீங்கள். இருப்பினும், பீட்சாவில் எந்த தயக்கமும் இன்றி என்னுடன் இயல்பாக நடித்தீர்கள். அதற்காகவே நானும் உங்களுடன் மீண்டும் நடிக்க விரும்புகிறேன் என்று சொன்னாராம் விஜயசேதுபதி.
ஆக, கெமிஸ்ட்ரியை ஒர்க்அவுட் செய்ய வேண்டும் என்பதற்காகவே மீண்டும் ஒரு படத்தில் நடிக்க தயாராகிக்கொண்டிருக்கிறார்கள். பீட்சா ஜோடி.