ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ஆங்கில படங்கள், கொரியன் படங்களை பார்த்து அப்பட்டமாக அதனை காப்பியடித்து அதனை சொந்த சரக்கு போல இங்கு விற்கும் டைரக்டர்கள் ஏராளம். இண்டர்நெட்டும், சமூக வலைத்தளங்களும் பெருகிவிட்ட இந்த நாளில் எளிதில் ரசிகர்கள் கண்டுபிடித்து விடுவார்கள் என்று தெரிந்தும் இதுபோன்ற காப்பியடிப்பில் துணிச்சலாக ஈடுபடுகிறார்கள். கண்டுபிடித்து விட்டால் அந்தப் படத்தோட இன்ஸ்பிரேசனில் எடுத்தேன் என்று சொல்வார்கள்.
டைரக்டர் மிஷ்கினின் அத்தனை படங்களும் அப்பட்டமான காப்பிதான். ஆனாலும் காப்பி அடித்ததே தெரியாமல் எடுப்பார். இந்தபடத்தின் இன்ஸ்பிரேஷன் என்று கண்ணுக்குத் தெரியாத எழுத்தில் டைட்டிலில் போடுவார்.
அமீர் தோட்ஷி என்ற கொரியன் படத்தை யோகியாக எடுத்து மாட்டிக் கொண்டார். அந்தப் படம் வெளியான மறு வாரமே அழுக்கன் என்ற படம் அதே தோட்ஷியை காப்பி அடித்து எடுத்து ரிலீசானது.
இப்போது நேர் எதிர். புகழ்பெற்ற ஹாலிவுட் படமான அக்ராஸ் தி ஹாலை அப்படியே ஈயடிச்சான் காப்பி அடித்து எடுத்து ரிலீஸ் பண்ணியிருக்கிறார்கள். படத்தோட இயக்குனர் திரைக்கதை என்ற தன் பெயரை கூச்சமே இல்லாமல் போட்டுக் கொண்டிருக்கிறார். இதில் வேடிக்கை என்னவென்றால் இதே அக்ராஸ் தி ஹால் படத்தை காப்பி அடித்து உன்னோடு ஒரு நாள் என்று ஒரு படம் ஏற்கெனவே ரிலீசாகியும் விட்டது. இன்னும் எத்தனை படங்களை ஒரே டிவிடியை பார்த்து எத்தனை பேர் எடுத்துக் கொண்டிருக்கிறார்களோ தெரிவியவில்லை.
"இன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே...." என்ற எம்.ஜி.ஆர் பாட்டுதான் நினைவுக்கு வருகிறது.