'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
என்னதான் நவநாகரீகம் ஒட்டிக்கொண்டாலும், உடல் அழகு, முக அழகு என்று வருகிறபோது, இயற்கை வைத்திய முறைகளைத்தான் நடிகர்-நடிகைகள் நாடிச்செல்கிறார்கள். முக்கியமாக, உடல மசாஜ் மற்றும் ஆயுர்வேத சிகிச்சைகளில் அடிக்கடி ஈடுபடுகிறார்கள். இதனால் கேமரா லைட்டுகளின் வெப்பத்தினால் உடம்பில் ஏற்படும் உஷ்ணத்தை தணிப்பதோடு, தோல் வறட்சியும் நீங்கி விடும் என்பதற்காக, இதுபோன்ற ஆயுர்வேத சிகிச்சைகளை நாடுகிறார்.
சமீபத்தில்கூட ஆயுர்வேத சிகிச்சைக்காக ஹன்சிகா கேரளா செல்லவிருப்பதாக செய்திகள் வெளியாகின. தனது உடல் அழகை மேலும் வசீகரப்படுத்தவே அவர் அங்கு செல்வதாகவும் கூறப்பட்டது. ஆனால், இப்போது ஹன்சிகாவுக்கு நரம்பு தளர்ச்சி இருப்பதாகவும், அதற்காக அலோபதி சிகிச்சை செய்து எந்த பலனும் கிடைக்காததால், இப்போது ஆயுர்வேத சிகிச்சைக்காக அவர் கேரளா செல்லயிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த செய்தி ஹன்சிகாவின் உயிருக்கு உயிரான ரசிகர்களுக்கு இதயத்தில் இடிவிழுந்த அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இதையடுத்து, அவர் பூரண குணம்பெற வேண்டிய சிம்பு மற்றும் ஹன்சிகாவின் சில தீவிர ரசிகர்கள், பிரசித்தி பெற்ற கோயில்களில் அவருக்காக விசேஷ பிரார்த்தனைகளையும் செய்து வருகிறார்களாம்.