மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
ஆச்சர்யங்கள் என்ற படத்தில் அறிமுகமானவர் தமன். அதன்பிறகு விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திசேகரனின் சட்டம் ஒரு இருட்டறை படத்தின் ரீமேக்கில் நடித்தார். அதைத் தொடர்ந்து இப்போது கேபிள் சங்கர் இயக்கியுள்ள தொட்டால் தொடரும் என்ற படத்தில் நடித்திருக்கிறார். ஆக்ஷன் த்ரில்லர் கதையில் உருவாகியுள்ள இந்த படம் முந்தைய படங்களில் தனக்கு கிடைக்காத வெற்றியினையும் சேர்த்து பெற்றுத்தரும் என்று நம்பிக்கொண்டிருக்கிறார் தமன்.
மேலும், இப்படத்தில் சண்டை காட்சிகளில் அதிக ரிஸ்க் எடுத்து நடித்துள்ளாராம் தமன். வில்லன் நடிகர் வின்சென்ட் அசோகனுடன் மோதுவது போன்ற ஒரு காட்சியில், உயரமான பில்டிங்கின் மீது நின்று சண்டை செய்தாராம். அப்போது கீழே பார்த்தால், தலை சுற்றுவது போல் இருந்ததாம். ஆனபோதும, விழுந்து விட்டால் என்ன செய்வது என்ற பயத்தை மனதில் போட்டு குழப்பாமல், காட்சி மீது முழு கவனத்தையும் வைத்து நடித்தாராம்.
ஆனால், அப்படி நடித்துக்கொண்டிருந்தபோது, திடீரென்று தவறி கீழே விழுந்து விட்டாராம் தமன். நல்ல வேலையாக அந்த காட்சி மொட்டை மாடியில் நடந்ததால் காலில் அடிபட்டதோடு தப்பினாராம். அதையடுத்து, மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, ஓய்வெடுக்க வேண்டும் என்றார்களாம். ஆனால், தான் ஓய்வெடுத்தால், படப்பிடிப்பு நிறுத்தப்படும். இதனால் தயாரிப்பாளருககு தேவையில்லாத நஷ்டம் ஏற்படும் என்று காலில் கட்டு போட்டபடியே ஸ்பாட்டுக்கு சென்று அந்த சண்டை காட்சியை தொடர்ந்தாராம் தமன்.
அதோடு, அஜீத் எவ்ளோ பெரிய நடிகர். அவரெல்லாம் படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டும், அதையடுத்து படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு, ஓய்வெடுக்காமல் நடிக்கிறார். அவரே அப்படியிருக்கும்போது, வளர்ந்து வரும் நான், எடுத்ததற்கெல்லாம் படப்பிடிப்புக்கு லீவு போட்டால், என்னை நம்பி பணம் போட்டு படமெடுக்கும் தயாரிப்பாளருக்குதானே பாதிப்பு என்று சொல்லி, யூனிட்டை புல்லரிக்க வைத்து விட்டாராம் தமன்.