‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
புதுமுக நடிகர் விவேக் நடித்துள்ள படம் ஒரு மோதல் ஒரு காதல். அதாவது ஒரு கல் ஒரு கண்ணாடி பாணியில் இந்த தலைப்பை சூட்டியிருக்கிறார்கள். இப்படத்தில் கதைப்படி, கதாநாயகிக்கு தமிழ் தெரியாதாம். இந்திதான் பேசுவாராம். அதனால் இந்தி தெரிந்த நடிகையை நடிக்க வைத்தால் யதார்த்தமாக இருக்கும் என்று பாலிவுட்டில் இருந்து மேகா என்றொரு நடிகையை இறக்குமதி செய்திருக்கிறார்கள்.
ஒரு வார்த்தைகூட தமிழ் தெரியாத மேகா, காதல் கதை என்பதால் எளிதாக கேட்ச் பண்ணி நடித்தாராம். ஏற்கனவே இந்தியில் நடித்திருக்கும் மேகா, நியூயார்க் நகரில் நிறைய டிராமாக்களில் நடித்தவராம். அதோடு, ஒரு ஹாலிவுட் படத்திலும் நடித்திருக்கிறாராம். கோல்கட்டாவில் பிறந்தாலும், வளர்ந்ததெல்லாமே மும்பையில்தானாம்.
இப்படத்தில் நடித்தது பற்றி மேகா கூறுகையில், கதைப்படி இந்தி பேசும் நடிகையாகவே நடித்திருக்கிறேன். ஆனாலும், தமிழை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. என்னைச்சுற்றியிருந்தவர்கள், என்ன பேசுகிறார்கள் என்பதை அறிந்து அதற்கு இந்தியிலோ, ஆங்கிலத்திலோ பதில் கொடுத்து வந்தேன். அதனால் அடுத்தடுத்து தமிழில் நடிக்கும்போது தமிழை கற்றுக்கொண்டு நடிப்பேன் என்றார்.
இப்படத்தில் ஒரு பஞ்சாபி பாடலும் இடம்பெற்றுள்ளது. அந்த பாடலை தமிழே தெரியாத அதிதி என்ற பெண் பாடலாசிரியர் எழுத, இந்தி பாடகி ஒருவர் அப்பாடலை பாடியுள்ளாராம்.