ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
விளையாட்டு வீரர்கள் மீது நடிகைகளுக்கு எப்போதுமே ஒரு ஈர்ப்பு உண்டு. அதனால்தான் கிரிக்கெட் வீரர்களுடன் நட்பு வளர்க்கும் பல நடிகைகள் கிசுகிசுக்களில் சிக்கிக்கொள்கிறார்கள். இந்த நிலையில், டென்மார்க்கைச்சேர்ந்த பேட்மின்டன் வீரர் மத்தியாஸ் போய் என்பவருடன் தற்போது காதல் கிசுகிசுவில் சிக்கியுள்ளார் டாப்சி.
கடந்த சில மாதங்களாகவே ஜாலியாக ஊர் சுற்றிக்கொண்டிருக்கும் இவர்கள், அடிக்கடி நட்சத்திர ஹோட்டல்களில் டேரா போடுவதாகவும் கூறப்படுகிறது. அதோடு, டாப்சியை காண அடிக்கடி டென்மார்க்கில் இருந்து மும்பை வரும் மத்தியாஸ், படப்பிடிப்பு தளத்துக்கே வந்து காதலை வெளிப்படுத்துகிறாராம். இதையடுத்து, விரைவில் அவர்கள் திருமண பந்தத்தில் இணையப்போவதாகவும் பாலிவுட்டில் பரபரப்பாக செய்தி பரவியுள்ளதாம்.
ஆனால், டாப்சியோ, நானும், மத்தியாசும் நண்பர்கள் மட்டுமே. அந்த அடிப்படையில்தான் அவர் என்னை சந்திக்க வருகிறார். அதேபோல் நானும் அவரை சந்திக்க சென்றிருக்கிறேன். அதனால் எங்களுக்கிடையிலான நட்பை காதல், கல்யாணம் என்று கதை திரிக்க வேண்டாம். இவர் மட்டுமின்றி எனக்கு நூற்றுக்கணக்கான பாய் ப்ரண்டுகள் இருக்கிறார்கள். அனைவரிடமுமே நான் இப்படி சகஜமாகத்தான் பழகுவேன் என்று கூறுகிறாராம்.
ஆனால், மத்தியாஸ்-டாப்சி காதல் செய்தி காட்டுத்தீயாய் இணையதளங்களில் பரவியதையடுத்து கோலிவுட், டோலிவுட்டில் இருந்தும் டாப்சிக்கு நெருக்கமான சில நடிகர்கள் அவரை தெடர்பு கொண்டு இதுபற்றி கேட்டறிந்துள்ளார்களாம். அந்த அளவுக்கு டாப்சியின் பாய்பரண்டுகளை இந்த செய்தி பதற வைத்து விட்டதாம்.