Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மீண்டும் தனுசுடன் நடிக்க ஆசைப்படும் வெள்ளாவி தேவதை டாப்சி!

29 ஜன, 2014 - 14:16 IST
எழுத்தின் அளவு:

பெரும்பாலும் கதாநாயகியாக நடித்து வரும் நடிகைகள், சிறிய வேடங்களில் நடிப்பதற்கு தயங்குவார்கள். அதைப்பார்த்து விட்டு தொடர்ந்து அது மாதிரி நடிக்க அழைப்பார்களே என்கிற பயம்தான் இதற்கு காரணம். இருப்பினும், சில சமயங்களில் அதை அவர்களால் தவிர்க்க முடியவில்லை. இயக்குனர்களுடன் நட்பை வளர்க்க வேண்டும். எதிர்காலத்தில் அவர்களின் படங்களில் இடம்பெற வேண்டும் என்பதை மனதில் கொண்டு சில நடிகைகள் விட்டுக்கொடுககவும செய்கிறார்கள்.

அப்படித்தான் சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் ஒரு டீச்சர் வேடத்தில் சிறிது நேரம் நடித்திருந்தார் பிந்துமாதவி. அவர் டீச்சராக இருந்தபோதும் அவருக்கு லவ் லட்டர் கொடுப்பார் சிவகார்த்திகேயன். ஆனால் அதை வாங்கிக்கொண்டு அவருக்கு தனது திருமண அழைப்பிதழை அனுப்பி விடுவார் பிந்துமாதவி. சிறிய ரோல் என்றாலும், காமெடியாகவும், ரசிக்கும்படியாகவும் இருந்தது.

அதைப்பார்த்து இப்போது தான் இயக்கி வரும் வை ராஜா வை படத்தில் ஆடுகளம் டாப்சியை நட்புக்காக ஒரு வேடத்தில் நடிக்க அழைத்துள்ளார் ஐஸ்வர்யா தனுஷ். கடல் கெளதம், ப்ரியாஆனந்த் நடிக்கும் இப்படத்தில் டாப்சி சிறிது நேரமே வந்தாலும் நச்சென்று மனதில் ஒட்டிக்கொள்ளும் கதாபாத்திரமாம்.

மேலும், இப்படி கெஸ்ட் ரோலில் டாப்சி நடிப்பதற்கு இன்னொரு காரணமும் உள்ளதாம். தனுசுடன் ஆடுகளம் மூலம் என்ட்ரி ஆனவர் அதன்பிறகு பல படங்களில் நடித்தபோதும், எந்த படமும் அவரை அந்த முதல் படத்தைப்போன்று பேச வைக்கவில்லை. அதனால், தன்னைப்பொறுத்தவரை தனுஷ் ராசியான நடிகர்தான் என்று நினைக்கும் டாப்சி, மீண்டும் அவர் படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசையை மனதில் வைத்துக்கொண்டுதான் இதற்கு சம்மதித்தாராம். என்றபோதும அதை அவரிடம் வெளிப்படுத்தாதவர், நட்பை இன்னும் வளர்த்தபடி, அதற்கான சூழலை உருவாக்கிக்கொண்டிருக்கிறாராம் டாப்சி.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in