Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பேசி கவிழ்ப்பதில் கில்லாடியாகி விட்டார் லட்சுமிமேனன்!

29 ஜன, 2014 - 12:48 IST
எழுத்தின் அளவு:

ஒன்பதாவது படித்தபோதே கும்கி படத்தில் நாயகியானவர் லட்சுமிமேனன். சின்ன பெண்ணாக இருந்தபோதும் அவரது நடிப்பில் மெச்சூரிட்டி இருந்தது. அதனால்தான், அடுத்தடுத்து வெயிட்டான வேடங்களுக்கு அவரை புக் பண்ணினர். ஆக, இப்போது கைநிறைய படங்கள் வைத்துக்கொண்டு இளவட்ட நடிகைகளில் நான்தான் நம்பர்ஒன் என்று சவால் விட்டுக்கொண்டிருக்கிறார்.

அதோடு விமல், சித்தார்த், விஷால் என இரண்டாம் தட்டு ஹீரோக்களுடன் ஜோடி போட்டபடி அடுத்த லெவலுக்கு சென்று கொண்டிருக்கிறார். அதோடு, முன்பு மாதிரி இல்லாமல் சினிமாவை நன்கு படித்து விட்ட லட்சுமிமேனன், யாரிடம் எப்படி பேசிப்பழக வேண்டும் என்பதையும் நன்றாக தெரிந்து வைத்திருக்கிறார்.

அதனால், ஒரு படத்தில் நடித்து முடித்ததும், அப்பட ஹீரோ மற்றும் இயக்குனர், தயாரிப்பாளர்களை அத்தோடு மறந்து விடுவதில்லை. அடிக்கடி போன் போட்டு நலம் விசாரிக்கும் நடிகை, சில சமயங்களில் அவர்களது குடும்பம் வரை சென்று உறவாடி, பழக்கவழக்கத்தை பலப்படுத்துகிறாராம். அப்படி செல்லும்போது, குடும்ப நபர்களிடம் கலகலவென்று பேசிப்பழகி, குடும்பத்தில் ஒருத்தர் போலாகி விடுகிறாராம் நடிகை.

இதனால், சம்பந்தப்பட்டகள் அடுத்தடுத்து படம் பண்ணும்போது, அவர்களது குடும்பத்தைச்சேர்ந்தவர்களே, கதாநாயகிக்கு நம்ம லட்சுமிமேனனையே புக் பண்ணுங்க என்று உரிமையோடு கேட்டுக்கொள்கிறார்களாம். அதுமட்டுமின்றி, மற்ற நடிகைகளெல்லாம், நடிகர்களுடன் கடலை போடவே தயங்கும் நிலையில், லட்சுமிமேனனோ, அவர்கள் வீட்டில் ஏதேனும் விசேசம் என்றால், பொக்கையுடன் ஆஜராகி விடுகிறார். நடிகர்களின் வீட்டு பெண்களின் சமையலை மூக்கு பிடிக்க ஒரு பிடி பிடித்து விட்டு, இந்த மாதிரி சாப்பாட்டை என் வாழ்நாள்ல நான் சாப்பிட்டதே இல்லை என்று அவர்கள் மனசு குளிரும் வகையில் புகழ் தள்ளுகிறாராம்.

நடிகையின் இந்த பேச்சில் மயங்கிப்போகும் நடிகர் வீட்டு தாய்குலங்கள், அதன்பிறகு லட்சுமிமேனனின் அபிமானிகளாகி விடுவதோடு, இந்த மாதிரி நல்ல நடிகைகளுடன் தொடர்ந்து நடிக்குமாறும் தங்களது வீட்டு நடிகரை கேட்டுக்கொள்கிறார்களாம். ஆக, லட்சுமிமேனனுக்கு பலதிசைகளில் இருந்தும் இப்போது சிபாரிசுகள் கிடைத்த வண்ணம் உள்ளன.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in