தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ரொமான்டிக் கதைகளோ, ஆக்சன் கதைகளோ எதுவானாலும் அதற்கேற்ப தன்னை உருமாற்றிக்கொண்டு நடிப்பதில் கைதேர்ந்தவர் தனுஷ். அதனால்தான் ராஞ்சனா இந்தி படத்தில் அவர் நடிக்க சென்றபோது அவரை ஒரு மார்க்கமாக பார்த்த மும்பைவாலாக்கள், பின்னர் படம் வெளியானபோது அந்த ஒல்லிகுச்சி நடிகரா இப்படி நடித்திருக்கிறார் என்று ஆச்சர்யமாக பார்த்தனர். அந்த அளவுக்கு தன்னிடமுள்ள மைனஸைகூட ப்ளசாக வெளிப்படுத்திக் காட்டக்கூடியவர் தனுஷ்.
இந்த நிலையில், கன்னடத்தில் லுசியா என்ற சைக்கோவை மையமாகக்கொண்ட படத்தை இயக்கிய பவன்குமார் என்பவர், அந்த படத்தை அடுத்து தமிழிலும் ரீமேக் செய்யப்போகிறராம். அதற்கு யார் பொருத்தமாக இருப்பார்கள் என்று இங்குள்ள நடிகர்களை அலசியபோது, தனுஷ் மட்டுமே கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்துவார் என்ற முடிவுக்கு வந்திருக்கிறாராம் பவன்குமார்.
தனுஷ் சைக்கோவாக நடித்த காதல் கொண்டேன், மயக்கம் என்ன உள்ளிட்ட சில படங்களைப்பார்த்தபோது இந்த முடிவுக்கு வந்துள்ள அவர், இந்த படத்தில் ஒரு சைக்கோ அடுக்கடுக்கான கொலைகளை செய்வது போல் கதை பின்னப்பட்டுள்ளது. அதில் தனுஷ் நடித்தால் மிக தத்ரூபமாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ள அவர், தமிழ் சினிமாவில் இந்த வேடத்துக்கு தனுஷை தவிர வெறு எந்த ஹீரோவும் பொருத்தமாக இருக்க மாட்டார்கள் என்றும் தனது கருத்தை வெளிப்படையாக கூறியுள்ளார்.