Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஆஞ்சநேயர் பக்தரான உதயநிதி ஸ்டாலின்!

28 ஜன, 2014 - 17:57 IST
எழுத்தின் அளவு:

ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் ஹிட் காரணமாக, மீண்டும் அதே பாணியில் இது கதிர்வேலன் காதல் படத்தில் காமெடி கலந்த காதல் கதையில் நடித்துள்ளார் உதயநிதி ஸ்டாலின். அதேபோல், முந்தைய படத்தில் நடித்த ஹன்சிகா சாயலில் இந்த படத்தில் நயன்தாரா நடிக்க, அதே சந்தானமே இப்படத்திலும் நண்பராக நடித்திருக்கிறார்.

அதுமட்டுமின்றி, முந்தைய படத்தில் வேணாம் மச்சான் வேணாம் பொண்ணுங்க காதலு என்று பாடிய உதயநிதியும், சந்தானமும் இந்த படத்தில் பல்லாக்கு தேவதை என்ற பாடலில் அசத்தல் நடனமாடியிருக்கிறார்களாம். குறிப்பாக, முதல் படத்தில் புதிதாக நடை பயிலும் குழந்தை போன்று ஆடிய உதயநிதி, இந்த படத்தில் முன்பே நடன ஒத்திகை பார்த்து விட்டு அசத்தலாக நடனமாடியிருக்கிறார்.

இதற்கெல்லாம் மேலாக, இப்படத்தில் அவர் தீவிர ஆஞ்சநேயர் பக்தராக நடித்துள்ளார். படம் முழுக்க கழுத்தில் ஒரு ஆஞ்சநேயர் டாலர் பொருத்திய மாலையை அணிந்து நடித்துள்ள உதயநிதி, தினமும் ஆஞ்சநேயரை வணங்கி விட்டுத்தான் எந்த வேலையையும் தொடங்குவாராம். அதோடு, நயன்தாரா தன்னை காதலிக்க துரத்தும்போது, நான் ஆஞ்சநேய பக்தன். எனக்கு பெண் வாசணையே பிடிக்காது என்றும் ஓடி ஒழிப்பாராம். ஆக, உதயநிதியின் ஆஞ்சநேய விரதத்தை முடிவுக்கு கொண்டு வந்து அவரை காதலிக்க வைப்பதுதான் கதையாம்.

நிஜத்தில் உதயநிதி கடவுள் பக்தி கொண்டவரோ இல்லையோ, ஆனால் படத்தில் ஆஞ்சநேயன் பக்தன் என்பதை அழகாக மெயிண்டெயின் பண்ணி நடித்துள்ளாராம். அதனால், ஆஞ்சநேய பக்தர்கள் இந்த படத்தைப்பார்த்தால், உதயநிதிக்கு தீவிர ரசிகராகி விடுவார்களாம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in