Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஜெய்யின் செண்டிமென்டை நினைத்து அலறும் நடிகைகள்!

28 ஜன, 2014 - 17:06 IST
எழுத்தின் அளவு:

சினிமா உலகைப்பொறுத்தவரை ஹிட் படங்களில் நடித்த ஜோடிகளை இணைத்து காதல் கிசுகிசுக்கள் கசிவது சகஜமாகி விட்டது. ஆனால், அதற்கு சிலர் மறுப்பு சொன்னாலும், பலர் அதை கண்டும் காணாததும் போலவே இருந்து விடுகிறார்கள். காரணம், இன்றைய நிலையில் கிசுகிசுக்கள்கூட சிறந்த பப்ளிசிட்டியாக கருதப்பட்டு வருகிறது. அப்படித்தான் சுப்ரமணியபுரம் படத்தில் ஜெய்-ஸ்வாதி இருவரும் நடித்தபோதும் அவர்களைப்பற்றி கலர் கலராக காதல் கிசுகிசுக்கள் புகைந்தன. அதற்கு அவர்கள் எந்தவொரு மறுப்பும் சொல்லாமல், இப்படியெல்லாம்கூட இலவச விளம்பரம் கிடைக்கிறதே என்று ரசித்துக்கொண்டிருந்தார்கள்.

அதையடுத்து, எங்கேயும் எப்போதும் படத்தில் நடித்தபோதும் ஜெய்யுடன், அஞ்சலியை இணைத்து காதல் செய்திகள் வெளியானது. அதைத் தொடர்ந்து திருமணம் என்னும் நிக்கா படத்தில் ஜெய்யுடன் ஜோடி சேர்ந்த மலையாள நடிகை நஸ்ரியாவையும் அவருடன் இணைத்து வழக்கம்போல் காதல் செய்திகள் பரபரப்பாக வெளியாகிக்கொண்டிருந்தன. இதற்கு நஸ்ரியா மறுப்பு சொன்னபோதும், ஜெய் மட்டும் கண்டுகொள்ளாமல் இருந்து வந்தார்.

இந்த சூழ்நிலையில், ஜெய்யுடன் காதல் கிசுகிசுவில் முதலில் சிக்கிய ஸ்வாதி, சுப்ரமணியபுரம் மெகா ஹிட்டானபோதும் அதன்பிறகு படமில்லாமல் ஆந்திராவுக்கு திரும்பி விட்டார். அதையடுத்து, படுவேகமாக வளர்ந்து கொண்டிருந்த அஞ்சலியோ, எங்கேயும் எப்போதும் படத்தையடுத்து சித்தியுடன் ஏற்பட்ட பிரச்சினையால் கோடம்பாக்கத்தையே காலி பண்ணி விட்டு ஓட்டம் பிடித்து விட்டார். அவர்களைத் தொடர்ந்து நஸ்ரியாவோ, வேகமாக படங்களில் புக்காகி வந்தவர், இப்போது பகத்பாசிலை திருமணம் செய்து கொள்ளப்போவதாக கூறிக்கொண்டு நடிப்புக்கே குட்பை சொல்லி விட்டார். ஆக, ஜெய்யுடன் காதல் கிசுகிசுவில் சிக்கிய அத்தனை நடிககளுமே காணாமல் போய் விட்டார்கள்.

இந்த சேதி, தற்போது ஜெய்யுடன் நடித்து வரும் புதுமுக நடிகைகளுக்கு தெரியவர, கலவரமான மனநிலையுடனேயே இருக்கிறார்களாம். ஜெய்யுடன் சிரித்து பேசினால்கூட அது காதல் செய்தியாகி இந்த ஒரு படத்தோடு தாங்கள் சினிமாவை விட்டே வெளியேற வேண்டிய நிலை ஏற்படும் என்பதால், அவர் தங்களைப்பார்த்து சிரித்து பேசினால்கூட முகத்தை வெறப்பாக வைத்துக்கொண்டே நிறகிறார்களாம் நடிகைகள். மேலும் அடுத்தடுத்து ஜெய்யுடன் நடிப்பதற்கு கால்சீட் கேட்டு எந்த நடிகையிடம் சென்றாலும், ஆளை விடுங்க சாமி என்று அலறிக்கொண்டு ஓடுகிறார்களாம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in