தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தொடர்ந்து ஹிட்டுகளை கொடுத்துக் கொண்டிருக்கும் விஜய் சேதுபதிக்கு அடுத்த டெஸ்ட் வருகிற 31ந் தேதி வருகிறது. தென்மேற்கு பருவக்காற்றில் 3 லட்சம் சம்பளத்தில் நடித்தவர் இன்று 3 கோடிக்கு மேல் வாங்குகிறார். காரணம் தொடர் ஹிட். அது தொடருமா, இன்னும் சம்பளம் உயருமா என்பது ஜனவரி 31 அன்று தெரிந்து விடும். அன்றுதான் அவர் நடித்திருக்கும் ரம்மி ரிலீசாகிறது. இயக்குனர் லிங்குசாமியின் மானேஜராக இருந்து அவ்வப்போது சிறுசிறு வேடங்களில் நடித்து வந்த பாலகிருஷ்ணன்தான் ரம்மியை டைரக்ட் செய்திருக்கிறார்.
ரிலீஸ் நெருங்கும் நேரத்தில் படத்தை பற்றி அவர் கூறியிருப்பதாவது: சீட்டு விளையாட்டில் ரம்மி ரொம்பவே சுவாரஸ்யமானது. திறமையும், அதிர்ஷ்டமும் பிப்டி பிப்டி கலந்த விளையாட்டு, மொக்கையா விளையாடுவன் கூட ஜெயிப்பான். பெரிய அனுபஸ்தர்கள்கூட தோற்றுப்போயிடுவாங்க. ஜோக்கருக்கு பெரிய மதிப்பு இருக்கும். இப்படிப் பட்ட விளையாட்டை வாழ்க்கையில பொருந்திச் சொல்லியிருக்கேன்.
விஜய்சேதுபதி ஜோசப் என்ற கேரக்டரிலும், இனிகோ பிரபாகர் சக்தி என்ற கேரக்டரிலும் நடிச்சிருக்காங்க. காயத்ரி இனிகோவுக்கு ஜோடியாக தாவணியில் அசத்தி இருக்காங்க. கண்ணு பெருசா அழகா இருக்கணும், நல்லா நீச்சல் தெரியணும் அப்படி ஒரு ஹீரோயின் தேடினப்போ விஜய்சேதுபதி அடையாளம் காட்டின பொண்ணுதான் ஐஸ்வர்யா. அவுங்களும் பிரமாதமா நடிச்சிருக்காங்க. என்கிறார் பாலகிருஷ்ணன்.