ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சந்தானம் காமெடியனாக வளர்ந்து வந்தபோது, அவரது நடிப்பில் கவுண்டமணியின் சாயல் இருப்பதாக சொன்னார்கள். அவரைப்போலவே நக்கல் நய்யாண்டி என்று நடிக்கிறார். இவருக்கு தனித்துவம் இல்லை. அதனால் சீக்கிரமே காணாமல் போய் விடுவார் என்றெல்லாம் ஊதி தள்ளினார்கள். ஆனால், சந்தானம் அதன்பிறகுதான் வேகமாக வளர்ந்து இப்போது தொட முடியாத உயரத்தில் நிற்கிறார். அவரை வைத்துதான் சில ஹீரோக்களின படங்களே போணியாகிக்கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், தற்போது வளர்ந்து கொண்டிருக்கும் இன்னொரு காமெடியனான பரோட்டா சூரியையும், அவரது நடிப்பில் வடிவேலுவின் சாயல் இருப்பதாக கோடம்பாக்கத்தில் சிலர் தப்பட்டம் அடித்து வருகிறார்கள். ஆனால் இந்த சேதி சூரியின் காதுகளுக்கு சென்றபோது, அவர் எந்த டென்சனையும் காட்டவில்லை. மாறாக, நான் ஒன்றும் பிறவிக்கலைஞன் இல்லை., சாதாரண குடும்பத்தில் பிறந்தவன். சினிமாவைப்பார்த்துதான் நடிப்பை கற்றுக்கொண்டேன். நாகேஷ், சுருளிராஜன், கவுண்டமணி, வடிவேலு என எல்லோரது நடிப்பையும் ரசித்திருக்கிறேன்.
அதனால் எனது நடிப்பில் அவர்களது சாயல் என்னையுமறியாமல் வெளிப்படலாம். அது ஒன்றும் அத்தனை தவறான விசயமில்லை. முன்னோடிகள்தானே நமக்கு நடிப்பை கற்றுத்தந்தவர்கள். அந்த வகையில், வடிவேலுவின் நடிப்பு போல் என் நடிப்பும் உள்ளது என்று சொன்னால் அது பெருமைக்குரிய விசயமே.
அதேசமயம் யாரையும் இமிடேட் பண்ண வேண்டும் என்று நான் நினைத்ததில்லை. எனக்கென்று ஒரு தனித்துவத்தை ஏற்படுத்த வேண்டும் என்றுதான் நடிக்கிறேன். அதனால் இப்போது அப்படி சொன்னாலும், போகப்போக அது மாறி இது சூரி ஸ்டைல் என்கிற நிலை உருவாகும் என்கிறார் சூரி.