பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
டைரக்டர் விஷ்ணுவர்தன் இயக்கிய அறிந்தும் அறியாமலும், பட்டியல், சர்வம், ஆரம்பம் போன்ற படங்களில் நடித்தவர் ஆர்யா. அதன்காரணமாக அவரும், விஷ்ணுவர்தனும் வாடா போடா நண்பர்களாகி விட்டனர். ஆரம்பம் படத்திற்கு பிறகு அவர்களது நெருக்கம் இன்னும் அதிகமாகி விட்டது.
இந்நிலையில், சமீபகாலமாக பல நடிகர்கள், டைரக்டர்கள் தயாரிப்பு நிறுவனங்கள் தொடங்கி வருவதைப்பார்த்த விஷ்ணுவர்தனுக்கும் அந்த ஆசை ஏற்பட்டது. ஆனால், அதற்கு ஒரு பார்ட்னர் இருந்தால் எளிதாக இருக்கும் என்று நினைத்தவர், அதுபற்றி ஆர்யாவிடம் சொன்னார். ஏற்கனவே படித்துறை என்ற படம் மூலம் தயாரிப்பாளராகி, அதை கிடப்பில் போட்ட ஆர்யாவுக்கு மீண்டும் தயாரிப்பாளராக வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட, இப்போது விஷ்ணுவர்தனுடன் இணைந்து ஒரு நிறுவனத்தை தொடங்கிவிட்டார்.
ஆனால் இந்த நிறுவனத்தில் ஆர்யாவும், விஷ்ணுவர்தனின் தம்பியும், நடிகருமான கிருஷ்ணாவும் பங்குதாரர்களாம். இந்த நிறுவனத்தின் மூலம் ஏ.ஆர்.முருகதாஸ், தனுஷ் உள்ளிட்ட சில நடிகர்களை மாதிரி மற்றவர்களுக்கு சான்ஸ் கொடுக்க வேண்டும் என்ற நோக்கம் இருந்தாலும், முதல் தயாரிப்பாக ஆர்யா நடிக்கும் படமொன்றை தயாரிக்க இருக்கிறார்கள். அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகிறதாம்.