பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில், முருகா படத்தை இயக்கிய ஆர்.டி.நேசன் இயக்கிய படம் ஜில்லா. விஜய், மோகன்லால், காஜல்அகர்வால் ஆகியோர் நடித்திருந்த இந்த படம், பொங்கலுக்கு வெளியானது. இந்நிலையில், அடுத்து ஜில்லா படத்தை தமிழில் இயக்கிய ஆர்.டி.நேசன் தெலுங்கில் ரீமேக் செய்யப்போகிறாராம். தெலுங்கு ரசிகர்களை மனதில் கொண்டு சில சிறிய மாற்றங்களை செய்யப்போகிறார்களாம்.
மேலும், தமிழில் விஜய் நடித்த வேடத்தில் தெலுங்கில் நடிப்பதற்கு மகேஷ்பாபு பொருத்தமாக இருப்பார் என்பதால், அவரை அணுக திட்டமிட்டிருப்பவர்கள், மோகன்லால் வேடத்திற்கு தமிழில் இருந்து ஒரு முக்கிய நடிகரையோ அல்லது மலையாளத்தில் இருந்து மம்மூட்டியையோ நடிக்க வைக்கும் ஆலோசனையில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
இந்த ரீ-மேக் விவகாரம் காஜல்அகர்வாலின் காதுக்கு சென்றதுமே அடுத்த நிமிஷமே டைரக்டர் நேசனுக்கு போன் போட்டு, தெலுங்கிலும் நான்தான் நடிப்பேன். நீங்கள் எப்போது கால்சீட் கேட்டாலும் தர தயாராக இருக்கிறேன் என்று தானே முன்வந்து, வேறு எந்த நடிகைகளும் வாய்ப்பை தட்டிப்பறித்து விடக்கூடாது என்பதற்காக, அட்வான்ஸ் புக்கிங் ஆகி விட்டாராம் காஜல் அகர்வால்.