பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பிரபுதேவாவின் உதவியாளர் சஞ்சீவ் சீனிவாஸ் முதன் முதலாக டைரக்ட் செய்து வரும் படம் பொண்னொன்று கண்டேன். ஸ்டேட் அதெலட்டிக் சாம்பியன் அஸ்வின் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிப்பவர் விதார்ஷா. 2012ம் ஆண்டு மிஸ்.போபால் மற்றும் மிஸ்.மத்திய பிரதேசம் பட்டங்களை பெற்றவர். சில இந்திப் படங்களில் சிறிய கேரக்டரில் நடித்த இவர் இப்போது இந்தப் படத்தின் மூலம் தமிழ்பட ஹீரோயின் ஆகிவிட்டார். பேயக்கா மீனா என்பவர் வில்லியாக நடிக்கிறார். அழகன் பொன்ராஜ் மியூசிக் போட்டிருக்கிறார். அபீர் அலிகான் கேமராமேன்.
"லவ்வுக்கு அழகு முக்கியமில்லேன்னு மெசேஜ் சொல்லுகிற படம். எல்லாவித குவாலிபிக்கேஷனும் இருந்தாலும் அழகாக இல்லைங்ற ஒரே காரணத்துக்காக ஹீரோவின் காதலை மறுத்து அவமானப்படுத்தி விடுவார். பஸ் நிலையத்தில் கிடைக்கிற வேலையை செய்து வாழும் ஹீரோ தன் செயல்களால் எப்படி ஹீரோயின் மனசுல இடம்பிடிக்கிறார்ங்றதுதான் கதை. பாதி படத்தை பஸ்டாண்டுலதான் எடுத்திருக்கோம். புதுமுகத்தோட நடிக்க மாட்டோம்னு இங்குள்ள நடிகைங்க சொல்லிட்டதால விதார்ஷாவை நெட்டுல பார்த்துட்டு நடிக்க அழைச்சிட்டு வந்துட்டோம்" என்கிறார் டைரக்டர் சஞ்சீவ் சீனிவாஸ்.