சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி |
பழம்பெரும் கன்னட நடிகை ஜெயந்தி. நூற்றுக்கும் மேற்பட்ட கன்னட படங்களில் நடித்துள்ள ஜெயந்தி தமிழில் எதிர்நீச்சல், இருகோடுகள் உள்ளிட்ட பல பாலச்சந்தர் படங்களில் நடித்துள்ளார். 70 வயதாகும் ஜெயந்தி பெங்களூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு பாத்ரூமில் வழுக்கி விழுந்த ஜெயந்திக்கு இடுப்பு மூட்டு பிசகியது. உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் ஜெயந்தியால் நடக்க முடியவில்லை. வீடு திரும்பிய ஜெயந்தி தொடர்ந்து உடல் நலக்குறைவுடனேயே இருக்கிறார். அவரை உறவினர்கள் அருகில் இருந்து கவனித்து வருகிறார்கள். "சின்ன சின்ன பிசியோ தெரபி பயிற்சிகள் கொடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் அவர் நடந்து விடுவார்" என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.