'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
இசைப்பயணம் நன்றாக போய்க்கொண்டிருந்த நேரத்தில்தான் நடிப்பு ஆசை ஏற்பட நான் என்ற படத்தில் அரிதாரம் பூசினார் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி. அப்படம் பெரிய ஹிட் இல்லைதான். என்றாலும் நடிப்பு அவரை துரத்த மீண்டும் சலீம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் நான் படத்துக்கும் சேர்த்து மெகா ஹிட்டாகும் என்ற நம்பிக்கையை மனசு நிறைய வைத்தபடி நடித்து வருகிறார்.
மேலும், தான் நடித்த நான் படத்தில் பாடல்கைளை வித்தியாசமாக கொடுத்த விஜய் ஆண்டனி, சலீம் படத்திலும் நிறைய புதுமைகள் செய்திருக்கிறாராம். குறிப்பாக, ஒரு பாடல் இளைஞர்கள் விரும்பும் வகையில் அவளை நம்பித்தான் நாசமாயிட்டேன், மோசமாயிட்டேன் என்று எழுதப்பட்டு பதிவாகியுள்ளதாம்.
வழக்கமாக எவன்டி உன்னை பெத்தான் பெத்தான், கையில கெடச்சா செத்தான் செத்தான்என்று சிம்புவின் படங்களில் இடம்பெறுவது போன்று உருவாகியுள்ள இந்த பாடலின் மொத்த வரிகளுமே வித்தியாசமாக இருப்பதோடு, பின்னணி இசையும் பெரிய அளவில் வரவேற்கப்படும் என்று கூறும் விஜய் ஆண்டனி, நினைத்தாலே இனிக்கும் படத்தில் எம்.எஸ்.விஸ்வநாதன் குரலில் ரஜினி பாடி நடித்த சம்போ சிவசம்போ என்ற பாடலையும் ரீமிக்ஸ் செய்துள்ளாராம். இப்பாடலின் பின்னணி இசையில் சில புதிய இசைக்கருவிகளையும் மீட்டியிருப்பதாக கூறுபவர், இன்று 26-ந்தேதி இந்த இரண்டு பாடல்களும் வெளியாகி ரசிகர்களின் காதுகளுககு விருந்தாக இருப்பதாகவும் சொல்கிறார்.