வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
உதயநிதி-சந்தானம் இணைந்து நடித்த முதல் படமான ஒரு கல் ஒரு கண்ணாடியில் வேணாம் மச்சான் வேணாம் இந்த பொண்ணுங்க காதலு என்றொரு பாடல் இடம்பெற்றது. அந்த பாடலில் தான் காதலித்த கதையை உதயநிதி சொல்ல, சந்தானமோ, பொண்ணுங்களை காதலிப்பதால் வாழ்க்கையே கவிழ்ந்து விடும் என்பதுபோல் பாடியிருப்பார். அந்த பாடல் மெகா ஹிட் ஆனதால், இப்போது மீண்டும் அவர்கள் இருவரும் இணைந்து நடித்துள்ள இது கதிர்வேலன் காதல் படத்திலும் ஒரு அதிரடி பாடல் இடம்பெற்றுள்ளதாம்.
முந்தைய பாடல் கானா வடிவில் உருவாக, இந்த படத்தின் பாடலோ, கிராமங்களில் பாடப்படும் கூத்துப்பாட்டு வடிவில் இடம்பெற்றுள்ளதாம். பல்லாக்கு தேவதை என்று தொடங்கும் அந்த பாடலில் கானா தன்மை வெளிப்படாத வகையில், கிராமிய மணத்துடன் இசையமைத்துள்ளாராம் ஹாரிஸ் ஜெயராஜ். சமீபகாலமாக கானா பாடல்களில் விழுந்து கிடக்கும் ரசிகர்களுக்கு இது புதிய எனர்ஜியையும், புதிய டேஸ்டையும் கொடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாம். அதனால், வேணாம் மச்சான் பாடலை விட, இது மெகா ஹிட்டாகும் என்று எதிர்பார்க்கிறார்களாம்.
மேலும், இந்த பல்லாக்கு தேவதை நயன்தாராவை அழகாக வர்ணிக்கும் பாடல் என்பதால், அவரை ரொம்ப அழகாக காண்பித்திருக்கிறார்களாம். குறிப்பாக, மாடர்ன் டிரஸ் என்பதில் இருந்து விடுபட்டு, பாவாடை தாவணியில் நயன்தாராவை அழகுமிளிர கிராமத்து தேவதையாக காண்பித்திருக்கிறார்களாம. அந்த காட்சியை டோட்டல் யூனிட்டே பார்த்து கிறங்கிப்போனதோடு, படமாக்கி முடித்ததும் மானிட்டரில் தனது அழகைப்பார்த்து நயன்தாராவும் அசந்துபோய் நின்றாராம்.