இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
பாலாஜி சக்திவேலின் வழக்கு எண், மிஷ்கினின் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படங்களில் நடித்தவர் ஸ்ரீ. அப்படங்களில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்தபோதிலும் முழு கதாநாயகனாகவில்லை அவர். அதனால் தன்னை ஒரு முழு கமர்சியல் ஹீரோவாக வெளிப்படுத்த கதை கேட்டு வந்த ஸ்ரீ, தற்போது சோன்பப்டி என்றொரு படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் ஸ்ரீக்கு ஜோடியாக நிரஞ்சனா என்ற கேரளத்து பெண்குட்டி நடிக்கிறாராம்.
பெண் இயக்குனர் ஷிவானி இயக்கியுள்ள இந்த படம் சஸ்பென்ஸ் திரில்லர் கதையில் உருவாகியுள்ளதாம். இப்படத்துக்காக முதன்முதலாக நடனம் மற்றும் சண்டை காட்சிகளில் களமிறங்கியுள்ள ஸ்ரீ, இதற்காக முறையான பயிற்சி எடுத்து நடித்திருக்கிறாராம். கானா பாலாவின் பாடலுக்கு ஒரு குத்துப்பாடலில் செமத்தியான ஆட்டமும் போட்டிருக்கிறாராம். இளைஞர்களை குறி வைத்து இடம்பெற்றுள்ள இந்த பாடலுக்காக சில நாட்களாக நடன ஒத்திகை பார்த்து விட்டு, அதிரடி ஆட்டம் போட்டாராம் ஸ்ரீ.
மேலும், சமீபகாலமாக கோடம்பாக்கத்தில் உருவாகும் பெரும்பாலான படங்களில் டாஸ்மாக் காட்சிகள் இல்லாத படமே இல்லை என்கிற நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்த படத்தில் ஒரு காட்சியில்கூட டாஸ்மாக் காட்டப்படவில்லையாம். அதோடு புகைப்பிடிக்கும் காட்சிகளும் இல்லை என்று சொல்லும் டைரக்டர் ஷிவானி, சமுதாயத்தை கெடுக்கும் எந்தவொரு காட்சிகளும் இந்த படத்தில் மட்டுமின்றி இனிமேல் நான் இயக்கும் எந்தவொரு படத்திலும் இடம்பெறாது என்று உறுதிபட சொல்கிறார்.