Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கமல்ஹாசன், வைரமுத்துவுக்கு பத்மபூஷன் விருது!

26 ஜன, 2014 - 10:12 IST
எழுத்தின் அளவு:

குடியரசு தினத்தையொட்டி, பல்வேறு துறைகளில் சேவை மற்றும் சாதனை செய்தவர்களுக்கு, மத்திய அரசின் சார்பில், ஆண்டு தோறும், பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்தாண்டுக்கான, பத்ம விருதுக்கு, 127 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இதில், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், சினிமாவில் 50 ஆண்டுகளாக பணியாற்றி வரும் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், நடன அமைப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என பன்முக அடையாளங்களை கொண்டு, உலகநாயகன் என அனைவராலும் அழைக்கப்படும் கமல்ஹாசனுக்கு இந்தாண்டு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 1990-ம் ஆண்டு கமல்ஹாசனுக்கு மத்திய அரசு, பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்துள்ளது.

இதேப்போல் சினிமாவில் 7,500 பாடல்களுக்கு மேல் எழுதி சாதனைப்படைத்த கவிப்பேரரசு வைரமுத்துவுக்கும் இந்தாண்டு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவருக்கும் 2003ம் ஆண்டு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்துள்ளது.

இவர்கள் தவிர 11 முறை தேசிய விருது பெற்ற பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான சந்தோஷ் சிவனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதேப்போல் தி டர்ட்டி பிக்சர்ஸ், கஹானி போன்ற படங்களில் சிறப்பாக நடித்து, கடந்தாண்டு தேசிய விருது பெற்ற பிரபல இந்தி நடிகை வித்யாபாலனுக்கும் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in