ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
டைரக்டர் சுசீந்திரன் வெண்ணிலா கபடி குழு மூலமாகத்தான் சினிமாவுக்குள் வந்தார். அது கபடி விளையாட்டை மையமாக கொண்டு வந்தது. விஷ்ணுவும் அதில்தான் ஹீரோவாக அறிமுகமானார். சுசீந்திரன் அடுத்து டைரக்ட் செய்யப்போகும் படம் கிரிக்கெட் தொடர்பானது என்கிறார்கள். படத்தின் பெயர் வீர தீர சூர. இதில் மீண்டும் விஷ்னு சுசீந்திரன் டைரக்ஷனில் கிரிக்கெட் வீரராக நடிக்கிறார். தற்போது விஷ்ணு முண்டாசுபட்டி, கலக்கப்போற மாப்ளே படங்களில் நடித்து வருகிறார். அது முடிந்ததும் வீர தீர சூரவில் நடிப்பார்.
இந்தப் படம் சென்னை 28 போன்று காமெடி கிரிக்கெட் படம் இல்லையாம். கிரிக்கெட் மீது வெறிகொண்ட ஒரு ஏழை இளைஞன் எப்படி சர்வதேச லெவலில் சாதிக்கிறான் என்கிற கதையாம். இதில் கிரிக்கெட்டில் உள்ள அரசியல், மோசடிகள், ஜாதி தலையீடுகள் பற்றியெல்லாம் படம் பேசப்போகிறதாம். இதற்காக சுசீந்திரன் கிரிக்கெட் பற்றிய தகவல்களை சேகரித்து ஸ்கிரிப்ட் உருவாக்கிக் கொண்டிருக்கிறாராம். விஷ்ணு சிசிஎல் கிரிக்கெட்டில் விளையாட தயாராகிக் கொண்டிருக்கிறார்.