அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
கும்கி நாயகி லட்சுமிமேனனுக்கு கோடம்பாக்கமே எதிர்பார்த்ததை விட நல்ல வரவேற்பு கொடுத்து வருகிறது. அவர் நடித்து வரும் படங்களும் வெற்றி பெற்று வருவதால், தோல்வி படங்களாக கொடுத்து வரும் முன்னணி ஹீரோக்கள்கூட அவருடன் நடித்து தங்களை தொடரும் தோல்வியை விரட்டியடிக்க வேண்டும் என்று லட்சுமிமேனனை ஜோடி சேர்க்கும் நிலையும் உருவாகியிருக்கிறது.
அதனால்தான், பெரிய அளவில் பர்ஷனாலிட்டி இல்லாதபோதும் பர்பாமென்ஸ் ஒன்றை முன்வைத்து, மார்க்கெட்டில் முன்னேறிக்கொண்டிருக்கிறார் லட்சுமிமேனன். இந்த நேரத்தில்தான் நேரம் படம் மூலம் தமிழுக்கு என்ட்ரி கொடுத்தார் நஸ்ரியா. லட்சுமிமேனனைப்போலவே கேரளத்து பெண்குட்டியான அவர், அசத்தல் அழகியாக இருந்ததால், லட்சுமிமேனனுக்கான சில படவாய்ப்புகளை எளிதில் தட்டிப்பறித்தார்.
இதனால் ஆடிப்போயிருந்தார் லட்சுமிமேனன். தனக்கு ஒரே எதிரி இந்த நஸ்ரியாதான் என்று வசைபாடிக்கொண்டிருந்தார். ஆனால், லட்சுமிமேனனின் நல்ல நேரம், திடுதிப்பென்று பஹத்பாசிலை திருமணம் செய்து கொள்ளப்போவதாக அறிவித்துள்ளார் நஸ்ரியா. இதனால் சொல்லமுடியாத சந்தோசத்தில் இருக்கிறார் லட்சுமிமேனன்.
இதையடுத்து, கோடம்பாக்கத்திலுள்ள தனது நண்பர் வட்டாரம் அனைவருக்கும் போன் செய்து இந்த சந்தோச செய்தியை பகிர்ந்து கொண்டு வரும் லட்சுமிமேனன், தனக்கு நஸ்ரியா பெரிய அளவில் அறிமுகம் இல்லை என்றபோதும், அவரது செல்நம்பரை கண்டுபிடித்து அட்வான்ஸ் திருமண வாழ்த்துக்களையும் சொல்லிவிட்டாராம்.