ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழில் ஹிட்டான துப்பாக்கி படத்தை இந்தியில் ஹாலிடே என்ற டைட்டிலில் இயக்கி வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். (ஹாலிடேவுக்கு வீட்டுக்கு வரும் ராணுவ வீரர்கள் சந்திக்கும் சவால்தான் கதை என்பதால் இந்த டைட்டில்). இதில் விஜய் நடித்த கேரக்டரில் அக்ஷய்குமாரும், காஜல் அகர்வால் கேரக்டரில் சோனாக்ஷி சின்ஹாவும் நடிக்கிறார்கள்.
இதேப்போல், பிரபு தேவா டைரக்ட் செய்து வரும் படம் ஆக்ஷன் ஜாக்ஷன். இதில் அஜய் தேவ்கானும், சோனாக்ஷி சின்ஹாவும் நடிக்கிறார்கள். இவர்களுடன் யாமி கவுதம், மானஸ்வி ஆகியோரும் ஹீரோயின்களாக நடிக்கிறார்கள்.
இந்த இரண்டு படங்களும் வருகிற ஜுன் 6ந் தேதி ஒரே நாளில் ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு பெரிய ஹீரோக்கள், இரண்டு தமிழ் டைரக்டர்கள், ஒரே ஹீரோயின் என இப்போது நேருக்கு நேர் போட்டி இப்போதே களைகட்ட ஆரம்பித்திருக்கிறது.