பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது |
ஹாலிவுட் மற்றும் பாலிவுட்டில் ஒரு படம் வெளிவருவதற்கு முன்பு அந்தப் படத்தின் கதை தொடர்பான செல்போன் விளையாட்டுகள் வீடியோ கேம்கள் அறிமுகப்படுத்தப்படும். சூப்பர் மேன், ஸ்பைடர்மேன் படங்களுக்கு கட்டாயம் வந்து விடும். சமீபத்தில் வெளியான கிரிஷ் 3, சென்னை எக்ஸ்பிரஸ், ரேஸ் 2 ஆகிய பாலிவுட் படங்களும் செல்போன் விளையாட்டை அறிமுகப்படுத்தியது. முதன் முறையாக ஒரு தமிழ் படத்திற்கும் செல்போன் விளையாட்டை அறிமுகப்படுத்துகிறார்கள். படத்தின் டைட்டில் ரா.
"தொல்காப்பியத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த செல்போன் விளையாட்டிற்கு "முடிவில்லாத ஆரம்பம்" என்று பெயரிட்டுள்ளோம். 5 கேள்விகள் இருக்கும் அதற்கான விடையை தேடும்போது அந்த கேள்வியில் இருக்கும் விஷயங்கள் நம்மைச் சுற்றி நடப்பது போன்று இருக்கும். கனவில் நடக்கிறதா, நிஜத்தில் நடக்கிறதா என்பதை யூகிக்க முடியாத அளவிற்கு இது இருக்கும். படத்தின் ஆடியோ ரிலீசின் போது இந்த கேமை அறிமுகப்படுத்த இருக்கிறோம். ரா படமும் ஒரு பேண்டசி கதை. கிராபிக்ஸ் காட்சிகளை ஸ்பெஷல் 26 இந்திப் படத்திற்கும் மதராச பட்டினம் தமிழ் படத்திற்கும் பணியாற்றி மும்பை இமேஜிங் லேப் செய்துள்ளது" என்கிறார் படத்தின் இயக்குனர்.
அஷ்ராப், செங்கப்பா, அதிதி, லாரன்ஸ் நடிக்கிறார்கள். சரவணன் ஒளிப்பதிவு செய்கிறார். ராஜ் அரியான் மியூசிக் போடுகிறார். அஷ்ராப், பிரபு யுவராஜ் ஆகியேர் டைரக்ட் செய்கிறார்கள்.